1. தோட்டக்கலை

பருவ கால பயிர் சாகுபடி மற்றும் பராமரிப்பு வழிமுறைகள் குறித்த பயிற்சி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Training on seasonal crop cultivation and maintenance methods!

ராணிப்பேட்டை மாவட்டம் தக்காங்குளம் கிராமத்தில் பருவகால பயிர் சாகுபடி குறித்த பயிற்சி மற்றும் கருத்தரங்கம் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது.

இயற்கை விவசாயம் (organic farming)

விவசாயத்தைப் பொறுத்தவரை, இயற்கை விவசாயம் என்பதுதான் நம் சமூகத்தின் தற்போதையத் தேவையாக உள்ளது. ஏனெனில், மனிதனின் ஆரோக்கியத்திற்கும், மண்ணின் ஆரோக்கியத்திற்கும் இயற்கை விவசாயம்தான் அடிப்படை.

நெழிவு-சுழிவுகள் (Curvature-vortices

ஆக இயற்கை விவசாயத்தில் உள்ள நெழிவு- சுழிவுகளைத் தெரிந்துவைத்துக்கொண்டு அதற்கு ஏற்ப பயிர் சாகுபடி, இயற்கை மருந்துகளைக் கொண்டப் பராமரிப்பு, அறுவடை உள்ளிட்டவற்றை மேற்கொள்வது மிக மிக அவசியம்.

பருவகால பயிர் சாகுபடி (Seasonal crop cultivation)

அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், பருவகால பயிர் சாகுபடி மற்றும் பராமரிப்பு வழிமுறைகள் குறித்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

சந்தை (Market)

இதில் பாரம்பரிய நெல் ரகங்கள், காய்கறி விதைகளின் சந்தையும் நடைபெற உள்ளது.

நடைபெறும் இடம் (Venue)

தக்காங்குளத்தில் உள்ள கே.எம். இயற்கை வழி வேளாண் பண்ணையில் வரும் 18ம் தேதி காலை 8.30 மணி இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தலைமை (Leadership)

ஸ்ரீலஸ்ரீ சிவானந்த மௌனகுரு சாமிகள் அறக்கட்டளையின் தலைவர் விமல்.ஜி.நந்தகுமார் தலைமையில் இந்தப் பயிற்சியில் உழவன் கே.எம்.பாலு வரவேற்புரை நிகழ்த்துகிறார். உயிராற்றல் வேளாண்மை பயிற்றுனர் T. நவநீதகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றுகிறார்.

தொடர்புக்கு (For Contact)

கலந்துகொள்ள விரும்புபவர்கள் 9245114321, 9677499944 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க...

121 வகை மாம்பழங்களை ஒரே மாமரத்தில் வளர்த்து சாதனை!

மண் வளத்தை மேம்படுத்தும் புதிய மண் நுண்ணுயிரி நீலகிரியில் கண்டுபிடிப்பு!

English Summary: Training on seasonal crop cultivation and maintenance methods! Published on: 10 July 2021, 07:06 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.