பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைக்க ரூ.82,000 வரை மானியம் வழங்கப் படுவதாக திண்டுக்கல் வேளாண்துறை அறிவித்துள்ளது.
பட்டு வளர்ப்பு (Silk worm)
திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 3,957 ஏக்கரில் மல்பெரி சாகுபடி செய்யப்படுகிறது. பட்டு வளர்ப்பில் 2 ஆயிரம் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். எனவே ஆண்டுதோறும் 20 டன் வெண்பட்டுக் கூடுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
அவ்வாறு செய்யப்படும் மல்பெரி உற்பத்தியை மேலும் அதிகரிக்க அரசு பல வகையில் மானியம் வழங்குகிறது.
ரூ.82,000 மானியம் (Subsidy)
அதன்படி, மல்வா நடவு செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.10,500யும், தனி புழு வளர்ப்பு மனை நிலைக்கான திட்டத்தில் (1500 சதுர அடிக்கு மேல்) ரூ.2.75 லட்சம் அதாவது அலகு மதிப்பில் ரூ. 82,000 மனை மானியம் வழங்கப்படுகிறது
மனை நிலை 2-வது திட்டத்தில் (1000 சதுர அடிக்கு மேல் ) ரூ.1.75 லட்சத்தில் ரூ.87,500மும், மனை நிலை 3ம் திட்டத்தில் (700 ச.அ மேல்) ரூ.90,000த்தில் ரூ.63,000மும் மானியம் உண்டு.
பலவகை மானியம் (Miscellaneous subsidy)
இலவச புழு வளர்ப்பு திட்டத்தில் ரூ.70,000த்தில் 1200 சதுர அடிக்கு மேல் புழு வளர்ப்பு படுக்கைத் தாங்கிகள் அமைக்க ரூ.52,000ம், 5 ஏக்கர் வரை சொட்டு நீர் பாசனம் அமைக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ 33,600ம், மானியமாக வழங்கப்படுகிறது. அதேநேரத்தில் இதர விவசாயிகளுக்கு 26,100ரூபாய் மானியம் வழங்கப்படும்.
ரூ.25,000 பரிசு (Gift)
ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஏக்கரில், 800 முட்டை தொகுதிகள் வளர்த்து, 100 முட்டை தொகுதிகளுக்கு 80 கிலோ பட்டுக்கூடு அறுவடை செய்யும் சிறந்த பட்டு விவசாயிகளுக்கு பரிசாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க...
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மகனுக்கு அறிவுறுத்துங்கள்- மோடியின் தாயாருக்கு விவசாயி கடிதம்!
ரிசர்வ் வங்கி ஊழியராக விருப்பமா? கல்வித்தகுதி 10ம் வகுப்பு- உடனே விண்ணப்பியுங்கள்!
நோய்வாய்ப்பட்ட எஜமானர்- மருத்துவமனை வாசலில் காத்திருந்த நாய்!
Share your comments