பட்டுப்புழு வளர்க்க விரும்பும் விவசாயிகளுக்கு மல்பெரிச் செடிக்கன்றுகள், களைக்கருவி, சொட்டுநீர் பாசனம் மற்றும் புழு வளர்ப்பு மையம் அமைக்க அரசு மானியம் வழங்குகிறது.
மல்பெரி சாகுபடி
விவசாயத்தின் சார்புத் தொழில்களில் பட்டுப்புழு வளர்ப்பும் முக்கியமானது.
இதன் அடிப்படையில் மதுரை மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களிலும் 200 ஏக்கர் வரை மல்பெரி சாகுபடியும் பட்டுப்புழு வளர்ப்பு நடைபெறுகிறது.
அதிகரிக்கத் திட்டம் (Plan to increase)
சேடபட்டி, பேரையூரில் மட்டும் 30 விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். இந்த ஆண்டு கூடுதலாக 100 ஏக்கர் பரப்பளவில் சாகுபடியை அதிகரிக்க அரசுத் திட்டமிட்டுள்ளது. மல்பெரி செடியின் கன்று வாங்கி நடவு செய்தால் 3 மாதங்களில் செடி ஓரளவு வளர்ந்துவிடும். அதன்பின் பட்டுப்புழு மையம் அமைக்கலாம் என்கிறார் பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் கணபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: மதுரை டி.ஆர்.டி.ஏ. வளாகத்தில் பட்டுவளர்ச்சி துறை செயல் படுகிறது.
ரூ.52,500 மானியம் (Rs.52,500 grant)
மல்பெரி செடி வளர்க்க ஏக்கருக்கு ரூ.10,500 வீதம் நடவு மானியம் அதிக பட்சமாக 5 ஏக்கர் வரையும் களைக்கருவி, மருந்து தெளிப்பான் பிற உபகரணங்கள் வாங்க ரூ.52,500 மானியம் வழங்கப்படுகிறது.ஆயிரம் சதுர அடியில் பட்டுப்புழு வளர்ப்பு மையம் அமைக்க ரூ.4 லட்சம் செலவாகும். இதற்கு ரூ.1.20 லட்சம் மானியம் கிடைக்கும்.
இதைத் தவிர சொட்டுநீர் பாசனம் அமைக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஏக்கர் வரை பாசன வசதி செய்வதற்கு 100 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
இலவசப் பயிற்சி (Free training)
பிற விவசாயம் செய்பவர்களும் மல்பெரி சாகுபடி, பட்டுப்புழு வளர்ப்பை கற்றுக் கொள்ளும் வகையில் ஓசூர் அரசு பட்டு பயிற்சியில் 5 நாட்கள் இலவச பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
இந்த வசதிகளை பயன்படுத்தி மதுரை மாவட்டத்தில் பட்டுப்புழு வளர்ப்பை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்புக்கு
பட்டுப்புழு வளர்க்க விரும்புபவர்கள் 83442 19425 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு மற்ற விபரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
மேலும் படிக்க...
புதியக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி- 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!
கொரோனா தடுப்பூசி போடவில்லையா? - இனி ரேஷன் பொருட்கள், கியாஸ், பெட்ரோல் கிடையாது!
Share your comments