மத்திய அரசின் மிகப்பெரிய உணவு பூங்கா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும், மிகப்பெரிய உணவு பூங்காக்களை நிறுவுவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
உள்கட்டமைப்பு வசதி (Infrastructure facility)
உணவுப் பதப்படுத்துதல் துறைக்கு நவீன உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்காக மிகப்பெரிய உணவு பூங்காக்கள் திட்டத்தை மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.
விண்ணப்பம் செய்யலாம் (Can apply)
உணவுப் பதப்படுத்துதல் துறைக்கு நவீன உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்காக மிகப்பெரிய உணவு பூங்காக்கள் திட்டத்தை மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.பிரதமரின் விவசாயிகள் வளத் திட்டத்தின் புதிய பகுதியாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
முவாயிரம் விண்ணப்பங்கள் (Three thousand applications)
பிரதமரின் விவசாயிகள் வளத் திட்டத்தின் கீழ் வரும் இந்தத் திட்டங்களுக்காக மொத்தம் 3,323 விண்ணப்பங்கள் இதுவரை வரப் பெற்றுள்ளன.
மிகப்பெரிய உணவு பூங்காக்கள், ஒருங்கிணைந்த குளிர்பதன மற்றும் மதிப்பு கூட்டல் உள்கட்டமைப்பு, வேளாண் பதப்படுத்துதல் தொகுப்புகளுக்கான உள்கட்டமைப்பு, பின்னணி மற்றும் முன்னணி இணைப்புகளை உருவாக்குதல், உணவு பதப் படுத்துதல் மற்றும் சேமிப்பு திறன்களை உருவாக்குதல், விரிவுப்படுத்தல், உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய உள்கட்டமைப்பு, மனிதவளங்கள் மற்றும் நிறுவனங்கள், பசுமை செயல்பாடு ஆகியவை இத்திட்டத்தின் கீழ் வரும் திட்டங்களாகும்.
2021 பிப்ரவரி 5ஆம் தேதி நிலவரப்படி. தமிழ்நாட்டில் மட்டும் 25 விண்ணப்பங்கள் பிரதமரின் விவசாயிகள் வளத் திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ளன.
மேலும் படிக்க...
வெளிநாட்டுக்கு ஏற்றுமதி இல்லாததால் இறால் விலை கடும் வீழ்ச்சி!
காங்கயத்தில் நாளை கால்நடைத் திருவிழா!
பம்ப் செட்டுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும்- முதல்வர் அறிவிப்பு!
Share your comments