ஈஷா அறக்கட்டளையின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் மரம் நடும் வாய்ப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆசை (Desire)
மக்களில் பலருக்கும் மரம் நட வேண்டும் என்ற ஆசை நம்மில் பலருக்கு இருக்கும், ஆனால் எங்கு நடுவது அதை எப்படி பராமரிப்பது என்று தெரியாததால், ஆசையை நிறைவேற்றாமல் இருப்பர்.
மரம் நட வாய்ப்பு (Opportunity to plant a tree)
அப்படி மரம் நடவு செய்ய விரும்பும் மர ஆர்வலர்களுக்கு, சொந்தமாக நிலம் இல்லாவிட்டாலும் அவர்களும் மரம் நடும் பணியில் தங்களை இணைத்துக் கொள்ள காவிரி கூக்குரல் இயக்கம் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மரம் நட விரும்பு என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் நடைபெற இருக்கும் நிகழ்ச்சிகளின் மூலம் பொது மக்கள் தாங்கள் இருக்கும் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு நேரில் சென்று மரக் கன்றுகளை நடவு செய்ய முடியும்.
விவசாயிகள் தேர்வு (Farmers choose)
காவேரி கூக்குரல் இயக்கம் மரம் சார்ந்த விவசாயம் குறித்த விழிப்புணர்வை விவசாயிகள் மத்தியில் உருவாக்கி வருகிறது. அவ்வாறு முன்வரும் விவசாயிகளின் விளைநிலங்களில் ஈஷா மரம் சார்ந்த விவசாய திட்டத்தின் பிரதிநிதி நேரில் சென்று மண் மற்றும் நீரின் தன்மைகளை ஆய்வு செய்து அந்தந்த மண்ணின் தன்மைக்கு ஏற்ற மரக்கன்றுகளை பரிந்துரை செய்கின்றனர். பின்னர் விவசாயிகளின் தேர்வின் அடிப்படையில் மரக் கன்றுகள் விளைநிலங்களில் நடப்படுகின்றன.
30 நாற்றுப்பண்ணைகள் (30 nurseries)
மரங்களினால் மண் வளமும், நீர் வளமும் பெருகும் நிலை ஏற்படுகிறது. மேலும் மரங்கள் பல்வேறு வகைகளில் விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகை செய்கின்றது. தமிழகத்தில் மட்டும் 30 ஈஷா நாற்றுப் பண்ணைகள் இயற்கை முறையில் மரக் கன்றுகளை உற்பத்தி செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தத்திட்டத்தின் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா கணபதிபாளையம் கிராமத்தில் வரும் 14-03-2021 ஞாயிறுக் கிழமை காலை 09:00 மணி அளவில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விருப்ப முள்ளவர்கள் 80009 80009 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க...
ஜீவாமிர்தம் தயாரிப்பது எப்படி?
TNAUவின் மாதாந்திர நேரடி அங்கக வேளாண்மை பயிற்சி- அடுத்த மாதம் முதல் தொடங்குகிறது!
கலப்பு பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதால் என்ன ஆபத்து?
Share your comments