இயற்கை விவசாயத்தைப் பொறுத்தவரை, பூச்சி மற்றும் புழுக்கள் தாக்குதல்தான் சவால் மிகுந்தது. இதனைப் போக்க பல்வேறு வழிமுறைகளைக் கையாளலாம்.
60 சதவீதம் (60 percent)
இயற்கை விவசாயத்தில் பூச்சிகள், புழுக்கள் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பது இந்த பூச்சிப் பொறிகள்தான். இதை நம் வயலில் சரியான நேரத்தில் கையாண்டாலே பயிர்களில் 60 சதவீத தாக்கத்தைக் கட்டுப்படுத்தி விடலாம்.
2 முறை
பூச்சியை அழிக்கும் அல்லது பயிர்களைத் தாக்காமல் கவர்ந்து இழுப்பதற்கு இரண்டு முறைகள் உள்ளன. முதலாவது உயிரியல் முறை. இது இனக்கவர்ச்சி பயிர்களை ஊடு பயிராகவோ அல்லது வரப்பு ஓரங்களில் நட்டு முக்கிய பயிர்களை தாக்காமல் கவர்ந்து இழுப்பது. இரண்டாவதுக் கவர்ச்சி பொறிகள் வைத்து பூச்சிகளைக் கவர்ந்து இழுத்து அழிப்பது.
இந்த பொறிகளை நான்கு விதமாகப் பிரிக்கலாம்.
-
நாமே தயாரிக்கும் பொறிகள்
-
ஒட்டும் அட்டைகள்
-
கவர்ச்சிப் பொறிகள்
-
விளக்கு பொறிகள்
நாமே தயாரிக்கும் பொறிகள் (Traps we make ourselves)
சில பூச்சிகளைக் கட்டுப்படுத்த மரபு வழி முறையை பயன்படுத்தித் தயாரிப்பது உதாரணமாக காண்டாமிருக வண்டை கவர்ந்து இழுக்க கருவாட்டு பொறி, பழங்கள் மற்றும் பந்தல் காய்கறிகளை தாக்கும் பழ ஈக்களை அழிக்கும் பழ ஈ பொறி போன்றவற்றை சொல்லலாம்.
ஒட்டும் அட்டைகள் (insect traps sticky)
-
ஒட்டும் அட்டைகளை பொறுத்தவரை சிரியவகைப் பூச்சிகளைக் கவர்ந்து இழுத்து அழிப்பதில் பெரும் பங்கு உள்ளது. இதில் இரண்டு வண்ணங்கள் உள்ளன. அவை மஞ்சள் மற்றும் நீலம்.
-
மஞ்சள் வண்ணம் அட்டை இவை Whiteflies, Green Plant Hopper, Aphids, Thrips ,Leaf Minor,Thrips போன்ற பூச்சிகளையும் அவற்றால் எற்படும் வைரஸ் நோய்களையும் கட்டுப்படுத்தும்.
-
தென்னையை தாக்கும் ருகோஸ் பூச்சியை இந்த பெரியவகை மஞ்சள் ஷீட் கட்டுப்படுத்தும்.
-
நீலவண்ண ஓட்டும் அட்டைப் பூச்சிகளை பொறுத்தவரை மஞ்சள் நிறத்திற்கு பின்பு நீல நிறம்தான் அதிகம் கவர்ந்து இழுக்கும் இதுவும் மேல் சொன்ன பூச்சிகளை கவர்ந்து அளிக்கும்.
இனக்கவர்ச்சிப் பொறிகள் (Insect phermone traps)
பூச்சிகளை பெருமளவு கட்டுப்படுத்துவது இந்த வகை பொறிகள்தான். பெண் பூச்சிகள் ஆண்பூச்சிகளை கவர்ந்து இழுக்க வாசனை திரவங்களை வெளியிடும். அந்த திரவங்களை பயன்படுத்தி ஆண் பூச்சிகளை கவர்ந்து அளிக்கலாம். ஒவ்வொரு பூச்சிக்கும் ஒருவிதமான திரவம் இருக்கும். இந்த திரவங்கள் சந்தைகளில் அல்லது ஆன்லைனில் வாங்க முடியும். இந்த இனக்கவர்ச்சி பொறிகளில் பலவகை உள்ளன
வாளி வகை இனக்கவர்ச்சி பொறி (Bucket type racial trap)
இந்தவகைப் பொறிகள் காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன் வண்டு போன்றவற்றை கட்டுப்படுத்த உதவுகிறது. பொதுவாக இந்தவகை இனக்கவர்ச்சி பொறிகள் தென்னை மரங்கள் உள்ள பகுதிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
புனல் வடிவ இனக்கவர்ச்சி பொறி (Funnel shaped racial trap)
இந்தவகைப் பொறிகள் காய்கறிப் பயிர்களை தாக்கும் பூச்சிகளை, புழுக்களைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன அமெரிக்கன் காய்ப்புழு , தக்காளி பழதுளைப்பான், நெல் தண்டு துளைப்பான், பயறுவகை காய்துளைப்பான் இப்படி காய்கறிகள் மற்றும் பந்தல் காய்கறிகளை தாக்கும் பூச்சிகளை கவர்ந்து அளிக்கும்.
குடுவை வகை இனக்கவர்ச்சி பொறிகள் (Vase type racial traps)
இந்த வகை கவர்ச்சி பொறிகள் பெரும்பாலும் பழத்தோட்டங்களில் பயன்படுத்தப்படுகின்றன. கொய்யா , பப்பாளி , மாமரம் ஆகியவற்றைத் தவிர்த்து பந்தல் வகை காய்கறி பயிர்களுக்கும் இந்த கவர்ச்சி பொறிகள் பயன்படுத்தப்படுகின்றன . குறிப்பாக பழ ஈக்களை இந்த பொறிகள் கட்டுப்படுத்தும்.
விளக்குப் பொறிகள்(Solar light traps)
-
இந்தவகைப் பொறிகள் அனைத்து விதமான பயிர்கள், தோட்டக்கலைப் பயிர்கள் தானிய வகை பயிர்கள் எல்லாவற்றிக்கும் பயன்படுத்தலாம்.
-
பறக்கும் பூச்சிகள் குறிப்பாக தீமை செய்யும் பூச்சிகள் மாலை வேளையில்தான் அதிகம் பறக்கும். அவற்றை வெளிச்சத்தின் மூலம் கவர்ந்து இழுத்து அழிப்பதுதான் இந்த விளக்கு பொறிகளின் பிரதானப் பணி.
-
இவற்றில் இரண்டு வகை உண்டு. ஒன்று பாட்டரி அல்லது கரண்ட் மூலம் இயங்குபவை அடுத்தது சோலார் மூலம் இயங்கும் விளக்கு பொறி.
இந்த சோலார் வகை பொறிகள் கொஞ்சம் விலை அதிகம் என்றாலும் குறைந்தது 6 அல்லது 7 வருடங்களுக்கு நல்ல பலன் கொடுக்கும்.
-
தீமை செய்யும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணிவரை மட்டுமே எரிய விட வேண்டும். அதற்கு மேல் இருந்தால் நன்மை செய்யும் பூச்சிகளும் பாதிக்கப்படும்.
மேலும் படிக்க...
PMFBY: பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?
PMFBY: பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு!!
பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் ஐந்து ஆண்டு கால சாதனை : ரூ. 90,000 கோடி காப்பீடு வழங்கல்!!
Share your comments