வேளாண் பணிகளை சிரமப்படாமல் செய்வதற்கு ஏதுவாகவும், விவசாயத்தை மேம்படுத்தவும் வேளாண் பொறியியல் துறை சார்பில் பல்வேறு இயந்திரங்கள் வாடகைக்கு விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.
வாடகை என்ன? (How Much Rent)
இந்தப் பொருட்களை வாங்கிப்பயன்படுத்த விவசாயிகள் பலருக்கும் விருப்பம் இருந்தாலும், எவ்வளவு வாடகை செலுத்தவேண்டுமோ, அதிக பணத்தை செலவழிக்க வேண்டுமோ என்ற சந்தேகங்கள் மனக்கண்ணில் தோன்றும்.
எனவே விவசாயிகளின் இந்த சந்தேகத்தைப் போக்கும் வகையில் வேளாண் பொறியியல் துறை சார்பில் வழங்கப்படும் கருவிகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு என்ன வாடகை என்பதை இங்குப் பட்டியலிட்டுள்ளோம். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
டிராக்டர், உபகருவிகள் மற்றும் டீசல் உள்ளிட்ட கீழேப் பட்டியலிடப்பட்டுள்ள இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு வாடகை ரூபாய் 340/
இயந்திரங்கள்:
-
தென்னை மட்டையைத் தூளாக்கும் கருவி
-
விதைக்கும் கருவி
-
சோளத்தட்டை அறுவடை செய்யும் இயந்திரம்
-
செடிகள் நடும் இயந்திரம்
-
ஒன்பது கொழு கலப்பை
-
ஐந்து கொழு கலப்பை
-
வார்ப்பு இறகு கலப்பை
-
ரோட்டவேட்டர்
-
வைக்கோல் கட்டும் கருவி
-
வைக்கோல் உலர்த்தும் கருவி
பிற இயந்திரங்கள்:
-
மணல் அள்ளும் எந்திரம்/ ஜேசிபி- ரூ.660
-
திரும்பி மண் அள்ளும் இயந்திரம் உருளை பட்டை/ ஹிட்டாச்சி - ரூ.1440
-
மண் தள்ளும் இயந்திரம்/புல்டோசர் - ரூ.840
-
4.நெல் அறுவடை இயந்திரம் (சக்கரம்)- ரூ. 875
-
5.நெல் அறுவடை இயந்திரம் (ரப்பர் உருளை பட்டை)- ரூ .1,415
விவசாயிகள் கவனத்திற்கு (Attention Farmers)
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களில் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். வாடகை பணத்தை அலுவலகங்களில் செலுத்தி அதற்கான ரசீதை பெற்றுக்கொள்ள விவசாயிகள் மறந்துவிடவேண்டாம்.
தகவல்
பிரிட்டோ ராஜ்
வேளாண் பொறியாளர்
9944450552
மேலும் படிக்க...
உணவுப்பொருட்களில் கலப்படத்தைக் கண்டறிவது எப்படி? எளிய டிப்ஸ்!
யூரியாவைக் கட்டாயப்படுத்தி விற்பனை செய்திருந்தால், உரிமம் நிரந்தரமாக ரத்து!
Share your comments