மானாவாரி விவசாயம் என்பது முழுக்க முழுக்க மழையை ஆதாரமாகக் கொண்டது. ஆக பயிர்கள் வறட்சியைத் தாங்கி வளர்வதற்கு, விதைகளை கடினப்படுத்துதல் மிக அவசியமானதாகும். இது விவசாயகளுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாத தொழில்நுட்பம்.
அவ்வாறு விதைகளை கடினப்படுத்தி விதைத்தால், விதை முளைப்பு சதவிகிதம் அதிகரிக்கும்.வீரியமான நாற்றுக்கள் கிடைக்கும்.பயிர் வளா்ச்சியை ஊக்குவிக்கும். பயிர்கள் ஒருமித்த பயிர் முதிர்வு அடையும். பயிர்களின் மகசூல் அதிகரிக்கும். பயிருக்கு தேவையான அளவு சத்துப் பொருட்கள் கிடைக்கப் பெறுகிறது.
இதன்மூலம் ஏற்படும் வினையியல் மாற்றங்களினால் விதைகள் வறட்சியை தாங்கி வளரும் தன்மையை பெருகின்றன.
கடினப்படுத்துதல்
-
விதைகளை கடினப்படுத்த விதைகளை தேவையான நீர் அல்லது இரசாயனக் கரைசலில் ஒரு குறிப்பிட்ட கால அளவு ஊற வைக்க வேண்டும்.
-
பிறகு விதைகளை எடுத்து நிழலில் ஊறவைத்து பழைய ஈரப்பத்திற்கு திரும்ப கொண்டு வர வேண்டும்.
ஒவ்வொரு பயிருக்கும் விதைக் கடினப்படுத்துதலின் தொழில்நுட்பம் மாறுபடுகிறது. அவை என்ன என்பதைப் பார்ப்போம்.
துவரை
100 ppm துத்தநாக சல்பேட் (1 கிராம் உப்பை 1 லிட்டர் நீரில் கரைக்க வேண்டும். பிறகு 1 கிலோ விதையை 300 மி.லி உப்புக் கரைசலில் 4 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். முடிவில் விதைகளை அதன் பழைய ஈரப்பதத்திற்கே விதைகளை கொண்டு வந்து விதைக்க வேண்டும்).
நிலக்கடலை (Ground nut)
0.5 சதவீதம் கால்சியம் குளோரைடு (5 கிராம் உப்பை 1 லிட்டர் நீரில் கரைக்க வேண்டும். பிறகு 1 கிலோ விதையை 300 மி.லி உப்புக் கரைசலில் 4 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். முடிவில் விதைகளை அதன் பழைய ஈரப்பதத்திற்கே விதைகளை கொண்டு வந்து விதைக்க வேண்டும்).
சோளம் (Corn)
2 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு (20 கிராம் உப்பை 1 லிட்டர் நீரில் கரைக்க வேண்டும். பிறகு 1 கிலோ விதையை 650 மி.லி உப்புக் கரைசலில் 16 மணி நேரம் ஊறவைத்து முடிவில் பழைய ஈரப்பதத்திற்கே விதைகளை கொண்டு வந்து விதைக்க வேண்டும்).
உளுந்து
100 ppm துத்தநாக சல்பேட் (1000 மில்லி கிராம் உப்பை 1 லிட்டர் நீரில் கரைக்க வேண்டும். பிறகு 1 கிலோ விதையை 350 மி.லி உப்புக் கரைசலில் 3 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். முடிவில் விதைகளை அதன் பழைய ஈரப்பதத்திற்கே விதைகளை கொண்டு வந்து விதைக்க வேண்டும்).
பச்சை பயறு (Green Lentils)
100 ppm மாங்கனீசுசல்பேட் (1000 மில்லி கிராம் உப்பை 1 லிட்டர் நீரில் கரைக்க வேண்டும். பிறகு 1 கிலோ விதையை 350 மி.லி உப்புக் கரைசலில் 3 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். முடிவில் விதைகளை அதன் பழைய ஈரப்பதத்திற்கே விதைகளை கொண்டு வந்து விதைக்க வேண்டும்).
கேழ்வரகு (Ragi)
0.2 சதவீதம் சோடியம் குளோரைடு (2 கிராம் உப்பை 1 லிட்டர் நீரில் கரைக்க வேண்டும். பிறகு 1 கிலோ விதையை 700 மி.லி உப்புக் கரைசலில் 6 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். முடிவில் விதைகளை அதன் பழைய ஈரப்பதத்திற்கே விதைகளை கொண்டு வந்து விதைக்க வேண்டும்).
கம்பு, பருத்தி மற்றும் சூரியகாந்தி
2 சதவீதம் பொட்டாசியம் குளோரைடு (20 கிராம் உப்பை 1 லிட்டர் நீரில் கரைக்க வேண்டும். ஒரு கிலோ விதையை 650 மி.லி உப்புக் கரைசலில் 10 மணி நேரம் ஊறவைத்து பிறகு பழைய ஈரப்பதத்திற்கே விதைகளை கொண்டு வந்து விதைக்க வேண்டும்).
தகவல்
முனைவர்.ப.வேணுதேவன்.
உதவி பேராசிரியர் (விதை அறிவியல்),
வேளாண்மை அறிவியல் நிலையம்,
அருப்புகோட்டை,
விருதுநகர்
மேலும் படிக்க...
பாரம்பரிய காய்கறி சாகுடிபடிக்கு ரூ.15,000மானியம்- விவசாயிகளுக்கு அழைப்பு!
ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி - புதியத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார் முதல்வர்!!
Share your comments