பந்தலுார் வனத்தில் பூத்து குலுங்கும் செங்காந்தள் மலர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நீலகிரி மாவட்டம், பந்தலுார் பகுதியில் தமிழக மாநில மலரான செங்காந்தள் மலர்கள் அதிகளவில் பூத்துள்ளன.
செங்காந்தள் மலர்கள் (Sengandhal flower)
'குளோரிசா சூப்பர்பா' எனும் அறிவியல் பெயரை கொண்ட இந்த மலர்கள், கால் நுாற்றாண்டுக்கு முன்னர், தமிழகமெங்கும் வனம் மட்டுமின்றி, வனம் சார்ந்த வேளாண்மை, வேளாண்மை சாராத காடுகளில் பரவலாக காணப்பட்டது.
ஆண்டு முழுதும் இந்த மலரை காண முடியாது. இந்த மலர் ஏழு நாட்கள் வரை வாடாமல் இருக்கும்.செங்காந்தள் பூத்து தீக்கொழுந்து போல் காணப் படுவதால், 'அக்னி கலசம்' என்றும் அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் மருத்துவ பயிராக, 7,000 ஏக்கருக்கு மேல் இது வணிக ரீதியாக சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால், அதிகமான வனத்தை உள்ளடக்கிய, நீலகிரியில் இயற்கையாக பூத்து அழிந்து வருகிறது.
சுயதொழில் (Self employment)
நீலகிரியில் பழங்குடியின மக்கள் சுயதொழிலாக இந்த வகை மலர்களை சாகுபடி செய்ய தோட்டக்கலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும் படிக்க
வறட்சியை தாங்கும் சுரைக்காய்: ஓராண்டில் நல்ல மகசூல்!
நீங்கள் வாங்கும் கருப்பட்டி ஒரிஜினலா போலியா? கண்டறிவது எப்படி?
Share your comments