1. தோட்டக்கலை

சின்ன வெங்காயத்தில் புழுக்கள் தாக்குதல்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Worms attack small onions!

சின்னவெங்கயாத்தை சாகுபடி செய்யும்போது திடீரெனத் தாக்கும் புழுக்களை எவ்வாறு விரட்டுவது என்பது குறித்து வேளாண்துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

சின்ன வெங்காயத்தின் சிறப்பு (Specialty of small onions)

வெங்காயம் உடலுக்கு உகந்தது. இதிலும் சின்ன வெங்காயம் என்பது உரித்து எடுப்பதில் சிரமம் இருந்தாலும், உடல் நலத்திற்கு ஏற்றது.

பல நோய்களில் இருந்து நாம் விடுபடவும், சில நோய்கள் நம்மைத் தாக்காது இருக்கவும் சின்ன வெங்காயத்தை அனுதினமும் உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்தது என்பதே மருத்துவர்களின் பரிந்துரை.

சின்ன வெங்கயாம் சாகுபடி

அந்த வகையில், கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகள் சின்ன வெங்காயத்தை அதிகளவில் சாகுபடி செய்கின்றனர். இருந்தாலும், சாகுபடிக் காலங்களில், தாக்கும் புழுக்கள் மற்றும் நோய்களில் இருந்து சின்னவெங்காயத்தைப் பாதுகாக்க பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அதனைத் தவறாமல் கடைப்பித்தால், அதிக மகசூலைப் பெற முடியும் என்று வேளாண்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.

புழுக்கள் தாக்குதல் (Worms attack)

அந்த வகையில் திருப்பூர் மாவட்டம், பல்லடம் கவுண்டம்பாளையத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த சின்ன வெங்காய பயிர்கள் திடீரென புழுக்கள் தாக்கி கருகின. இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். தகவல் கொடுக்கப்பட்டதால், அங்கு வேளாண் அறிவியல் நிலைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது வேளாண் அறிவியல் நிலைய அதிகாரி கவிதா கூறியதாவது:

பயிர்மாதிரிகள் ஆய்வு (Study of crop specimens)

படைப்புழு தாக்குதலால் சின்ன வெங்காயத்தில் பயிர்கள் கருகி உள்ளன. மக்காச்சோள பயிரை தாக்கும் படைப்புழுக்கள், வெங்காய பயிர்களை மாற்று உணவாக பயன் படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதனை உறுதி செய்ய பயிர் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்து வருகிறோம்.

கட்டுப்படுத்தும் வழிகள் (Ways of controlling)

  • புழுக்களை கட்டுப்படுத்த ஆழமான உழவு மற்றும் வேப்பம் புண்ணாக்கு ஏக்கருக்கு 100 கிலோ இட வேண்டும்.

  • வயல் வரப்புகளில் ஆமணக்கு பயிரிடலாம்.

  • இனக்கவர்ச்சிப் பொறியைப் பயன்படுத்துதல், நீல நிறத்துணி அல்லது பாலிதீன் ஷீட்டை

  • வயல்களில் விரித்து வைத்தல் உள்ளிட்ட வழிமுறைகளை கையாளலாம்.

  • மக்காச்சோளம் பயிரிட்ட வயலில் வெங்காயம் பயிரிடுவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினர்.

மேலும் படிக்க...

வயல்களில் பதுங்கியுள்ள எலிகள்- தந்திரமாகக் கையாள்வது எப்படி!

சந்தைப் போட்டி இல்லாத சாத்துக்குடி சாகுபடி! விவசாயிகள் ஆர்வம்!

English Summary: Worms attack small onions! Published on: 28 June 2021, 06:55 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.