சாகுபடியில் நல்ல மகசூல் பெற்ற துத்தநாச சத்து அளிக்கும் தக்கதாகால்பேட் எனும் நுண்ணூட்ட உரத்தினை இட்டு பயன்பெறுமாறு வேளாண்மைதுறை அறிவுறுத்தியுள்ளது.
சம்பா பணிகள் தீவிரம் (Culitivation process)
புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் சம்பா சாகுபடியில் நாற்றங்கால் தயாரிப்பு மற்றும் நடவு பணிகளில் விவசாயிகள் தீவிரமாக வருகின்றனர்.
துத்தநாகச் சத்தின் அவசியம் (Essential)
மேட்டுப் பகுதிகளைவிட நீர் துத்தநாகச் சத்தானது நெற்பயிரில் மாவுச்சத்து உருமாற்றத் தாங்கும். பயிர் வளர்ச்சிக்குத் தேவையான இன்டோல் அசிட்டிக் அமிலம் AA உற்பத்தி செய்திடவும் உதவுகிறது.
இது கிரியா நீக்கியாகவும் மற்ற நுண்ணூட்டச் சத்துக்கள் பயிர் சரியான முறையில் பயன்படுத்தவும். பயிர்கள் நீரினைச் சீராக எடுத்துக் கொள்ளவும் உதவுகிறது. இதனால் நெற் பயிரில் பதர் நெல் குறைந்து மக்கள் அதிகமாகியது
பற்றாக்குறை அறிகுறிகள்
-
இலையின் மேற்பரப்பில் பழுப்பு நிறப் புள்ளிகள் காணப்படும்.
-
வளர்ச்சி தடைபட்டு நெற்பயிர் ஒரே சீராக இல்லாமல் காணப்படும்
-
இலைகளின் அளவு சிறுத்துக் காணப்படும்.
-
இலையின் நுனிப்பகுதி பச்சையாகவும், நடுப்பகுதி வெளிறிய மஞ்சள் நிறமாகவும் காணப்படும்.
-
இலைகளை மடித்தால் ஓடியக் கூடியதாக இருக்கும்.
-
குறிப்பாக நெற்பயிரில் துத்தநாகச் சத்துப் பற்றாக்குறையே கெய்ரா நோய் எனப்படும்.
கடைக்பிடிக்க வேண்டியவை
-
நடவுக்கு முன் துத்த நாக சல்பேட்டை ஏக்கருக்கு 10 கிலோ எடுத்து, 20 கிலோ மணலுடன் கலந்து சீராக மேற்பரப்பில் இட வேண்டும்.
-
ஒரு கிலோ துத்தநாக சல்பேட்டை 100 லிட்டர் தண்ணீரில் கரைத்துப் பெறப்படம் 1.0 கரைசலில் நாற்றின் வேர்ப்பகுதிகளை 10 நிமிடங்கள் நனைத்து நடவு செய்யலாம்.
-
நாற்றங்காலில் விதைப்புக்கு முன்னதாக ஒரு சென்ட்டிற்கு 60 கிராம் வீதம் ஒரு ஏக்கருக்கு தேவையான எட்டு சென்ட் நாற்றங்காலுக்கு 480 கிராம் இடலாம்.
-
அரை கிலோ சிங்க் சல்பேட்டை 100 லிட்டர் தண்ணீரில் கரைத்துப் பெறப்படும் 0.5% சத கரைசலை நாற்றறங்காலில் தெளிக்கலாம்.
தகவல்
இராம. சிவகுமார்,
மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்
புதுக்கோட்டை
மேலும் படிக்க...
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அரிசி கொள்முதல் - அறிவிப்பு வெளியிட்டது மத்திய அரசு !
Share your comments