அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் இனிமேல் 7ம் தேதி வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. இதற்காக, ரூ.698 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
மாணவிகளின் உயர்கல்வியை மேம்படுத்தும் வகையிலும், அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளை ஊக்குவிக்கும் வகையிலும், அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வி தொடர மாதம்தோறும் ரூ.1000 உதவி திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
நோக்கம்
ஏழை மாணவிகள் பள்ளியோடு படிப்பை நிறுத்தி விடக்கூடாது என்பதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழக அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.
விண்ணப்பம்
இதையடுத்து இந்தத் திட்டத்தில் லட்சக்கணக்கான மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதில் விண்ணப்பிக்கும் அவகாசம் கடந்த மாதம் 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
7ம் தேதி
இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மாதம்தோறும் 7-ம் தேதி முதல் வங்கிக்கணக்கல் மாதந்தோறும் வரவு வைக்கப்படும். இதற்காக அரசு ரூ. 698 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
Share your comments