குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் இந்த மாதத்தில் அறிவிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 3வது வாரம் தாக்கல் செய்யப்பட உள்ள தமிழக அரசின் பட்ஜெட்டில் இந்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் பொதுத் தேர்தலின்போது, திமுக கட்சி ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்ததது. அதன்படி திமுக ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் ஆகியும்தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி இதுவரை குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1,000 உரிமைத் தொகையை திமுக அரசு வழங்கவில்லை. இதனை சுட்டிக்காட்டியே எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியை விமர்சித்து வருகின்றன.
இந்த நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று கூடியுள்ளது. இதன் ஒருபகுதியாக மார்ச் 3வது வாரத்தில் தமிழக அரசின் பட்ஜெட் (நிதிநிலை அறிக்கை) தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவ்வாறு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில், குடும்பத் தலைவிகளுக்காக வழங்கப்படும் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் அறிவிப்பும் வெளியிட முடியும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஸ்டாலின் படத்துடன்
இதனை முன்னிட்டு, உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்துடன் கூடிய விண்ணப்பங்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. அதில், தமிழக அரசின் ஏழை குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உதவித் தொகைக்கான விண்ணப்பம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் கடை எண், குடும்பத் தலைவி பெயர், முகவரி, தொலைபேசி எண், ஆதார் எண், குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை, குடும்ப அட்டை வகை, குடும்ப அட்டை எண், வங்கிக் கணக்கு எண், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவரா? ஆம் எனில் பிபிஎல் பட்டியல் எண் ஆகியவை கோரப்பட்டுள்ளது. அதன் கீழ், குடும்ப அட்டைதாரர் விவரம் குறிப்பிடப்பட்டு, ரூ.1000 பெற தகுதி பெறுகிறாரா, இல்லையா என்று விண்ணப்பத்தை சரிபார்த்து சான்றளிப்பவர் கையொப்பமிடும் இடமும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
Fees கேட்டு நிர்பந்திக்கக்கூடாது- தனியார் பள்ளிகளுக்குக் கடும் எச்சரிக்கை!
Share your comments