1. செய்திகள்

1.08 லட்சம் கோடி உர மானியம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு!

R. Balakrishnan
R. Balakrishnan
Fertilizer subsidy

காரீப் பருவ காலத்தில் நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு, ஒரு இலட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய் உர மானியத்தை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ராபி மற்றும் காரிப் பருவம்

டெல்லியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கடந்த ஜனவரி மாதம் முதல் தேதி முதல் மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரையிலான ராபி பருவ காலத்தில், விவசாயிகளுக்கான ஊட்டச்சத்து சார்ந்த உர மானியத்தை மாற்றி அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதேபோல், ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரையிலான காரீப் பருவ காலத்தில், பொட்டாஸ் மற்றும் பாஸ்பேட் உரங்களுக்கான ஊட்டச்சத்து சார்ந்த மானிய விகிதங்களையும் நிர்ணயம் செய்து மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

உர மானியம் (Fertilizer subsidy)

பத்திரிகையாளர்களிடம் பேசிய மத்திய இரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, நடப்பு காரீப் பருவ காலத்தில் யூரியா உரத்திற்கு 70,000 கோடி ரூபாயும், டிஏபி உரத்திற்கு 38,000 கோடி ரூபாயும் மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதன் மூலம், சில்லரை விற்பனையில் உரத்தின் விலை உயராது எனவும், 12 கோடி விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்றும் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். இதேபோல, ஐடி ஹார்டுவேர் துறைக்கு 17,000 கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை வழங்கும் இரண்டாம் கட்ட திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக மன்சுக் மாண்டவியா கூறினார்.

மேலும் படிக்க

ரேசன் கடைகளுக்கு ISO தரச் சான்றிதழ்: கூட்டுறவுத் துறை செயலரின் அருமையான முயற்சி!

மாட்டுச்சாணத்தில் தயாராகும் கோயில் சிலைகள்: இயற்கை விவசாயி அசத்தல்!

English Summary: 1.08 Lakh Crore Fertilizer Subsidy: Central Government Approved! Published on: 18 May 2023, 08:47 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.