காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகளுக்கு ரூ.10.96 இலட்சம் மதிப்பிலான பயிர் கடன் மற்றும் வேளாண் இடுப்பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன். இ.ஆ.ப. தலைமையில் (29.11.2023) நடைப்பெற்றது.
இந்த கூட்டத்தில் வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை திட்டங்கள் தொடர்பாக அறிவுரைகள் விவசாயிகளுக்கு வழங்கினார். மேலும் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.
6 விவசாயிகளுக்கு பயிர்க்கடன்:
நேற்று நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், வேளாண்மை துறை சார்பில், 1 விவசாய பயனாளிக்கு ரூ.830/- மானியத்தில் தார்பாலினும், 2 விவசாய பயனாளிக்கு ரூ.6,000/- மானியத்தில் விசை தெளிப்பான்களும், 1 விவசாய பயனாளிக்கு ரூ.2,000/- மானியத்தில் மின்கலன் தெளிப்பானும், 1 விவசாய பயனாளிக்கு ரூ.2,500/- மானியத்தில் நேரடி நெல் விதைப்பானும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், 4 விவசாய பயனாளிகளுக்கு ரூ.2,94,157/- மானியத்தில் காளான் குடில் பணி ஆணைகளும் மற்றும் சொட்டு நீர் பாசனம் பணி ஆணையினையும் ஆட்சியர் வழங்கினார்.
மேற்கொண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களின் மூலம் 6 விவசாய பயனாளிகளுக்கு ரூ.4,06,522/- மதிப்பீட்டில் பயிர்கடன்களும், 6 விவசாய பயனாளிகளுக்கு ரூ.2,38,000/- மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்புக் கடன்களும், 5 விவசாய பயனாளிகளுக்கு ரூ.1,46,000/- மதிப்பீட்டில் மீன் வியாபார கடன்களும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
தாட்கோ மூலமாக விவசாய தொழிலாளர்களை ஊக்குவித்திடும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினை சார்ந்தவர்களுக்கு விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் கிரையத் தொகையினை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் குறைந்த வட்டியில் கடனாக பெற்று வாங்கலாம் எனவும் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் பா.ஜெயஸ்ரீ, வேளாண்மை இணை இயக்குநர் முனைவர்.பிரின்ஸ் கிளமென்ட், வேளாண்மை துணை இயக்குநர்/ மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வே) ரா.ராஜ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.
இதையும் காண்க:
கொடுவா மீன்வளர்ப்பு பணிக்கு 60 % வரை மானியம்- ஆட்சியர் அறிவிப்பு
பப்பாளி பழத்தினை மதிப்பு கூட்டுமுறையில் காசு பார்க்கும் வழிகள்!
Share your comments