1. செய்திகள்

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு!

R. Balakrishnan
R. Balakrishnan
School students

தமிழகத்தில் மாணவர்களுக்கு தேர்வுகள் வைக்காமல் அடுத்த ஆண்டிற்கு நேரடியாக தகுதி பெற்றனர். இந்த ஆண்டு கொரோனா தாக்கம் சற்று குறைந்து உள்ளதால் மாணவர்களுக்கு நேரடி தேர்வு நடைபெறும் என்று அரசு அறிவித்து இருந்தது.

பொதுத்தேர்வு (Public Exam)

கடந்த மே மாதம் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தேர்வு நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமாக 9.55 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். காலை 10 மணி முதல் மதியும் 1.30 மணி வரை தேர்வுகள் நடைபெற்றது. மாணவர்களுக்காக அதிக பேருந்து வசதியும் தமிழக அரசின் சார்பாக செய்து தர பட்டு இருந்தது.

இந்த தேர்வுக்கான அட்டவணை மார்ச் மாதமே பள்ளிக்கல்வித்துறை சார்பாக வெளியிட பட்டு இருந்தது. கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும், ஆன்லைனில் தேர்வுகள் நடத்தப்படாதா என்று மானவர்கள் எதிர்ப்பார்த்து காத்திருந்த நிலையில், நேரடியாக தேர்வுகள் நடைபெறும் என்று அரசு திட்டவட்டமாக கூறி இருந்தது.

தேர்வு முடிவுகள் (Exam Results)

கொரோனா சூழலை கருத்தில் கொண்டு மிகவும் பாதுகாப்புடன் தேர்வுகள் நடைபெற்றது. தற்போது விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஜூன் 17ம் தேதி முடிவுகள் வெளியாகும் என்றும் tnresults.nic.in தளத்தில் முடிவுகளை பார்க்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க

TNPSC முக்கிய அறிவிப்பு: கணினி வழித் தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியீடு!

பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு: அமைச்சர் அறிவிப்பு.!

English Summary: ‌10th public exam results release date announced! Published on: 14 June 2022, 02:29 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.