தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மே மாதம் நடைபெற்ற 11ம் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11-ம் வகுப்பு, பொதுத்தேர்வு மே 10ம் தேதி நடத்தப்பட்டது. 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு 3119 மையங்களில் நடைபெற்றது குறிப்பிடதக்கது. இத்தேர்வை, 8,83,882 பேர் எழுதினார்கள். இதில், மாணவர்கள் 4,33,684 பேரும், மாணவிகள் 4,50,198 பேரும் பொதுத் தேர்வு எழுதினர் என்பது குறிப்பிடதக்கது.
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள், கடந்த ஜூன் 20-ம் தேதி வெளியானது. இந்நிலையில் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என பள்ளிக்கல்வி துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. இந்த இணையதளங்களில் மாணவ, மாணவிகள் தங்களுடைய பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு கிராம வங்கி ஆட்சேர்ப்பு 2022: விவரம் உள்ளே!
சரிந்தது பஞ்சு விலை-ஜவுளி துறையினர் மகிழ்ச்சி!
மேலும், மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் சமர்பித்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடதக்கது. மேலும் மாணவ, மாணவிகள் மதிப்பெண் பட்டியலை சேமித்து வைக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த அதிகாரப்பூர்வ இணையத்தளங்களில் ஏற்கனவே வெளியான 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான மதிப்பெண்களையும் பார்க்க முடியும், யாரேனும் தேர்வு முடிவுகளை சேமித்து வைக்க மறந்திருந்தால், இந்த இணையத்தளங்களுக்கு சென்று மீண்டும் சேமித்துக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க:
தமிழகத்தில் முகக்கவசம் கட்டாயம் - மீறினால் அபராதம்!
தொடர்மழையால் கண்மாய்கள் நிரம்பியது: மகிழ்ச்சியில் விவசாயிகள்!
Share your comments