பால் என்பது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பருகும் அத்தியாவசியமான பொருள். நோயாளிகளுக்குக்கூட பால் குடிக்குமாறு மருத்துவர்கள் அறிவுரை வழங்குவது உண்டு. அந்த அளவுக்கு ஆரோக்கியத்திற்கு அடித்தளம் அமைக்கும் பாலில், நஞ்சு கலந்து, அண்டை மாநிலத்திற்கு விற்பனை செய்வது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு டேங்கர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட பாலை சோதனை செய்ததில், யூரியா கலந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து 12,750 லிட்டர் பால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள்
தமிழகத்திலிருந்து அண்டை மாநிலமான கேரளாவிற்கு பால், பழவகைகள், காய்கறிகள் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அவ்வாறு, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து, கேரளாவிற்கு பூ, காய்கறிகள், பழவகைகள், பால் என அத்தியாவசிய பொருட்கள் தினசரி செல்கிறது.
அதிகாரிகள் சோதனை
பொள்ளாச்சி அருகே உள்ள நடுப்புனி,கோபாலபுரம், கோவிந்தாபுரம், மீனாட்சிபுரம்,செம்பனாபதி என சோதனை சாவடிகள் உள்ளன. சோதனை சாவடிகளில் போலீசார், வனத்துறையினர், சுகாதாரத் துறையினர், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர்,
இந்நிலையில், திண்டுக்கல்லில் இருந்து தனியாருக்கு சொந்தமான தனியார் ட்ரான்ஸ்போர்ட் டேங்கர் லாரி, பொள்ளாச்சி வழியாக மீனாட்சிபுரம் சோதனை சாவடிக்கு வந்தது. அப்போது பாலக்காடு மாவட்டம் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் டேங்கர் லாரியில் இருந்த பாலைச் சோதனை செய்தபோது பாலில் கொழுப்பு தன்மைக்காக யூரியா கலந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
12,750- லிட்டர் பால்
இதைடுத்து, லாரியில் இருந்த யூரியா கலந்த 12,750- லிட்டர் பால் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் சோதனைச் சாவடிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடுமையாக சோதனை செய்து வருகின்றனர். பாலில் யூரியா கலந்த சம்பவம் தமிழக- கேரள எல்லையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
ஒரு சரக்கு வாங்கினால், 2 பாட்டில் இலவசம் - குஷியில் குடிமகன்கள்!
கூழ் காய்ச்சும் போது வலிப்பு -பாத்திரத்தில் விழுந்து இளைஞர் மரணம்!
Share your comments