1. செய்திகள்

PLUS 2 Exam Results- அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
12 th class exam results released in Tamilnadu

கடந்த 13.03.2023 முதல் 03.04.2023 வரை நடைப்பெற்ற மேல்நிலை இரண்டாமாண்டு (மார்ச் / ஏப்ரல் -2023) பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தேர்ச்சி பெற்றவர்களின் மொத்த சதவீதம்-94.03% ஆகும்.

தேர்வெழுதிய மொத்த மாணக்கர்களின் எண்ணிக்கை : 8,03,385. இதில் மாணவியர்களின் எண்ணிக்கை: 4,21,013 மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை- 3,82,371.

தேர்ச்சி விவரங்கள்:

தேர்வில் பங்கேற்றவர்களில் தேர்ச்சிப் பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 7,55,451 (94.03%). இதில் மாணவியர் 4,05,753 (96.38%) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 3,49,697(91.45%) தேர்ச்சி அடைந்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 1 (100.00%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.

வழக்கம் போல மாணவர்களை விட மாணவியர் 4.93% அதிகம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். கடந்த மே 2022-ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்வில் தேர்வெழுதிய மாணக்கர் 8,06,277. தேர்ச்சிப் பெற்றோர் 7,55,998. தேர்ச்சி சதவிகிதம் 93.76%.

கூடுதல் விவரங்கள்:

மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 7533. இதில் 100% தேர்ச்சிப் பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை-2767. 100% தேர்ச்சிப் பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை - 326.

பள்ளிகள் வகைப்பாடு வாரியான தேர்ச்சி விகிதம்:

அரசுப் பள்ளிகள்-89.80% மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.99%, தனியார் சுயநிதிப் பள்ளிகள் 99.08%, இருபாலர் பள்ளிகள்- 94.39%, பெண்கள் பள்ளிகள்-96.04%, ஆண்கள் பள்ளிகள்- 87.79%.

பாடப் பிரிவுகள் வாரியான தேர்ச்சி சதவிகிதம்:

  • அறிவியல் பாடப் பிரிவுகள்-96.32%
  • வணிகவியல் பாடப் பிரிவுகள்-91.63%
  • கலைப் பிரிவுகள்- 81.89%
  • தொழிற்பாடப் பிரிவுகள்- 82.11%

முக்கியப் பாடங்களில் 100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை

  • தமிழ்-2
  • ஆங்கிலம்- 15
  • இயற்பியல்- 812
  • வேதியியல்- 3909
  • உயிரியல்- 1494
  • கணிதம்- 690
  • தாவரவியல்- 340
  • விலங்கியல்- 154
  • கணினி அறிவியல்- 4618
  • வணிகவியல்- 5678
  • கணக்குப் பதிவியல்- 6573
  • பொருளியல்- 1760
  • கணினிப் பயன்பாடுகள்- 4051
  • வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல்- 1334

முக்கியப் பாடங்களில் தேர்ச்சி சதவிகிதம்

இயற்பியல்- 97.76%, வேதியியல்-98.31%, உயிரியல்-98.47%, கணிதம்-98.88%, தாவரவியல்-98.04%, விலங்கியல்-97.77%, கணினி அறிவியல்-99.29%, வணிகவியல்- 96.41%, கணக்குப் பதிவியல்-96.06%.

கடந்த மே-2022 பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை: 23,957. இந்தாண்டு மார்ச் / ஏப்ரல் 2023 பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 32,501.

தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணக்கரின் எண்ணிக்கை 4398. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 3923 (89.20%). தேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 90. அதில் தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 79 (87.78%).

மேலும் காண்க:

TNSTC விரைவு பேருந்துகளில் பெண்களுக்கென புதிய வசதி அறிமுகம்!

English Summary: 12 th class exam results released in Tamilnadu Published on: 08 May 2023, 10:58 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.