Exciting News For Ration card Holders..
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கிளியனூர் ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் லலிதா கலந்து கொண்டார்.
மேலும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்டப் பொறுப்பாளருமான நிவேதா முருகன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவி உமா மகேஸ்வரி, அவரது கணவரும், குத்தாலம் திமுக ஒன்றியச் செயலருமான மங்கை சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் பதில் அளிக்கும் முன்பே எவ்வித அரசு பொறுப்பிலும் இல்லாத திமுக ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர் மைக் மூலம் பதில் அளித்தார்.
இந்த நிலையில் தரங்கம்பாடி தாலுக்கா அலுவலகத்தில் புது ரேஷன் அட்டை வாங்குவதற்கு 1,200 ரூபாய் லஞ்சம் கேட்பதாக அப்பகுதியை சேர்ந்த இளைஞர் தமிழ் பாண்டியன் என்பவர் புகாராக தெரிவித்தார்.
இதை சற்றும் எதிர்பாராத மங்கை சங்கர் அவரது பேச்சை தடுத்து வேறு கதைக்கு சென்றார். ஆனால் அவர் தனது பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்தபடியே இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து இடைமறித்து பேச்சை நிறுத்த சொன்ன பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், ‘மைக்கில் பொதுவெளியில் இப்படி பேச கூடாது. புகார் தெரிவிப்பதற்கான கூட்டம் அல்ல.
உங்கள் புகார் மற்றும் குறைகளை மனுவாக எழுதி தாருங்கள். விசாரிக்கிறோம்’ என்று பேசினார். இதனையடுத்து புகாரளித்த அந்த இளைஞரிடம் இருந்த மைக் அதிகாரிகளால் வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டது.
பொதுமக்கள் குறைகளை கேட்பதற்காக உள்ள கிராம சபை கூட்டம் திமுக அரசின் புகழ் பாடுவதற்கு மட்டுமே பயன்பட்டதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். இதனால் கிராம சபை கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் படிக்க:
மக்களே உஷார்: ரேஷன் கார்டுக்கு புதிய விதிமுறை!
தமிழகம்: ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு...
Share your comments