பிப்ரவரி மாதம் நிறைவடைய உள்ள நிலையில், மார்ச் மாதத்தில் மொத்தம் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என ரிசர்வ் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் பொறுத்து பணிநாட்கள் வங்கி செயல்படும் நாட்கள் அறிவிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்தியாவில் செயல்பட்டு வரும் அனைத்து வங்கிகள் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இதனைப் பொறுத்து பணிநாட்கள் வங்கி செயல்படும் நாட்கள் அறிவிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. தற்போது மார்ச் மாதத்துக்கான விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது.
இதன்படி, மார்ச் மாதத்தில் மட்டும் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களின் படி வங்கி பணிகளை திட்டமிட்டுக் கொள்ளுமாறு, வாடிக்கையாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இந்த விடுமுறை நாட்களில், ஆன்லைன் மூலம் வங்கி சேவைகள் , ஏ.டி.எம் சேவைகளும் எந்த தடையும் இல்லாமல் செயல்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாத வங்கி விடுமுறை நாட்கள்
மார்ச் 01- மகா சிவராத்திரி
மார்ச் 02-திவாஸ்
மார்ச் 03-லோசர்
மார்ச் 04- சக்பார் குட்
மார்ச் 06- ஞாயிறு
மார்ச் 12 – 2வது சனிக்கிழமை
மார்ச் 13 - ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 17- ஹோலிகா டஹான்
மார்ச் 18 - ஹோலி பண்டிகை
மார்ச் 19- யசோங்
மார்ச் 20- ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 26- 4ம் சனிக்கிழமை
மார்ச் 27- ஞாயிற்றுக்கிழமை
மேலும் படிக்க...
மஹாசிவராத்திரி விழா - ஈஷாவில் கோலாகலக் கொண்டாட்டம்!
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் - ஒரு பார்வை!
Share your comments