1. செய்திகள்

13 மில்லியன் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் அவதி: செறிவூட்டப்பட்ட பால் சிறந்த உபாயம் என உலக சுகாதார அமைப்பு கருத்து

KJ Staff
KJ Staff

நாடு முழுவதும் கொழுப்பு சத்து நிறைந்த செறிவூட்டப்பட்ட பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை மேலும் திறம் பட செய்வதற்கான திட்டம் ஒன்றை செயல் படுத்த உள்ளது. உலக வங்கி, டாடா டிரஸ்ட் மற்றும் தேசிய பால்வள வளர்ச்சி அமைப்பு (NDDB)ஆகியன இணைத்து ஊட்டச்சத்தின்மைக்கு தீர்வினை தரும் வகையில் செயல் பட முயற்சித்து வருகிறது.

தேசிய பால்வள வளர்ச்சி அமைப்பின் கீழ் 25 க்கும் அதிகமான பால் நிறுவனங்கள் செயல் பட்டு வருகிறது. 20 ற்கும் அதிகமான மாநிலங்களில்  செறிவூட்டப்பட்ட பால் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நாடு முழுவதிலுமிருந்து ஒரு நாளைக்கு 55 லட்சம் லிட்டர் செறிவூட்டப்பட்ட பால் விநியோகிக்க பட்டு வருகிறது. SOP (Standard Operating Procedures) என்னும் அமைப்பு இதற்கான வரைமுறைகளை வழங்கியுள்ளது. இந்த அமைப்பு  தேசிய பால்வள வளர்ச்சி மற்றும் FSSAI  என்னும் இரு அமைப்பின் கீழ் செயல் படுகிறது.

இந்த அமைப்பு பால் நிறுவனகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் தேவையான பயிற்சி, நிதி உதவி,  SOP யில் தேவையான மாற்றங்கள் , தர உறுதி, தர கட்டுபாடு, தர பரிசோதனை,புதிய முயற்சிகள், உள்கட்டமைப்பு, மக்களுக்கு விழிப்புணர்வு  போன்றவை குறித்து விளக்கங்கள் கொடுக்க உள்ளது.

நம் நாட்டில் பெரும்பாலோனோர் வைட்டமின் A  மற்றும் வைட்டமின் D எனும் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பெருதும் அவதிப்பட்டு வருகிறார்கள்.  உலக சுகாதார அமைப்பின் அறிக்கைபடி உலகம் முழுவதிலுமிருந்து 13 மில்லியன் குழந்தைகள்  போதிய நுண்ணூட்டச்சத்து இன்றி உள்ளார்கள் என தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் 5 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள்  போதிய நுண்ணூட்டச்சத்து மற்றும் ஊட்டச்சத்து இன்றி இருக்கிறார்கள்.

பால் என்பது அனைத்து உயிர்களுக்கும் அடிப்படை உணவாகும். ஒரு நாட்டின் பொருளாதாரத்தையும், வளர்ச்சியினையும் இதன் மூலம் அறியலாம். எனவே உலக சுகாதார அமைப்பு  செறிவூட்டப்பட்ட பால் உற்பத்தியினை ஊக்க படுத்துகிறது.  

உலக அளவில் பால் உற்பத்தியில் முக்கிய இடத்தில நாம் உள்ளதால் போதிய நுண்ணூட்டச்சத்து மற்றும் ஊட்டச்சத்து வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எனவே இனி உற்பத்தியாகி வரும் பால்களில் தேவையான நுண்ணூட்டச்சத்துகளை சேர்க்க திட்டமிட்டுள்ளது. வைட்டமின் B 12, ஜிங்,  இரும்பு சத்து, போலிக் ஆசிட், வைட்டமின் D ஆகியன சேர்க்க பட உள்ளது.

இன்னும் ஒரு வருடத்திற்குள் தற்போது விநியோகிக்கும் பாலின் அளவை விட மூன்று மடங்கு அதிகமாக செறிவூட்டப்பட்ட பால் விநியோகிக்க திட்டமிட்டுள்ளது. ஊட்டச்சத்து மிக்க குழந்தைகளை உருவாக்குவது அவசியமாகும்.

Anitha Jegadeesan

Krishi Jagran

English Summary: 13 Million Infants Facing Iodine Deficiency: World Health Organization Suggests Fortified Milk Would Be A Option

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.