ரேஷன் கடைகளில் 14 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
ரேஷன் கடைகளில் 14 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளை இன்று முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளில் 14 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) அறிவித்திருந்தார். அதன்படி இந்த திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
முழு பட்டியல்
இந்நிலையில் ரேஷன் கடைகளில் அளிக்கப்படும் 14 மளிகை பொருட்களின் முழு விவரம் இதோ.
சர்க்கரை- 500 கிராம்
கோதுமை – 1 கிலோ
உப்பு- 1 கிலோ
ரவை- 1 கிலோ
உளுத்தம் பருப்பு- 500 கிராம்
புளி- 250 கிராம்
கடலை பருப்பு- 250 கிராம்
டீ தூள் -200கிராம்
கடுகு- 100 கிராம்
சீரகம்- 100 கிராம்
மஞ்சள் தூள்- 100 கிராம்
மிளகாய் தூள்- 100 கிராம்
குளியல் சோப்பு 25 கிராம் – 1
துணி துவைக்கும் சோப்பு (250 கிராம்)- 1 ஆகியவை இந்த 14 மளிகை பொருட்களில் அடங்கும்.
முன்னதாக கொரோனா நிவாரண (Coronavirus) நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி முதல் தவணையாக மே மாதம் ரூ.2000 அளிக்கப்பட்டது. மேலும் ஜூன் மாதம் ரூ.2000 அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று முதல் ஜூன் மாத நிவாரண தொகை ரூ.2000 அளிக்கப்படுகிறது.
மேலும் படிக்க...
நாளை தி.மு.க. MLA-க்கள் கூட்டம்! முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார்!
ரூ.4,000 கொரோனா நிவாரணம் வழங்கும் திட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்!
Share your comments