1. செய்திகள்

கொரோனா நிவாரண உதவி தொகையாக ரூ.2000, 14 வகையான மளிகை பொருட்களுக்குக்கான டோக்கன் இன்று முதல் வழங்கப்படுகிறது.

T. Vigneshwaran
T. Vigneshwaran

தமிழ்நாட்டில் கொரோனா நிவாரண உதவி தொகையாக ரூ.2000 ரொக்கப் பணமும்,14 வகையான மளிகை பொருட்களும் வழங்கும் பட்சத்தில் ரேஷன் கடைகளில் அதற்கான டோக்கன் ஊழியர்களால் இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா நெருக்கடியில் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. கொரோனா நிவாரண  உதவி தொகைக்கான முதல் தவணை ரூ.2000 வழங்கும் திட்டத்தை மே மாதம் 10ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இன்று முதல் இரண்டாம் தவணைக்கான டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

ஜூன் மாதத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா உதவி தொகைக்கான இரண்டாவது தவணை 2000 வழங்கும் திட்டத்தை கருணாநிதி பிறந்த நாளான கடந்த 3ம் தேதி  தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 4196.38 கோடி செலவாகும் இந்த திட்டதில் 2,09,81,900 ரேஷன் கார்டுதாரர்கள் பலன் பெறுவார்கள்.

அதே நாளில், குடும்ப அட்டைதாரர்களுக்கு 844.51 கோடி ரூபாய் செலவில், 14 அத்தியாவசிய மளிகை பொருட்கள்  தொகுப்பினை வழங்கும் திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதையெடுத்து ரூ.2000 மற்றும் 14 மளிகை பொருள்அடங்கிய தொகுப்பை வருகிற 15ம் தேதி முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக இன்று 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை ரேஷன் கடை பணியாளர்கள் பிற்பகல் நேரங்களில்  குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று டோக்கன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, இன்று காலை முதல் டோக்கன் வழங்கும் பணிகள் செயலில் உள்ளது.

ஒரு நாளில் அதிகப்பட்சமாக 200 பேர் வரை ரேஷன் கடைகளுக்கு வந்து கொரோனா நிவாரண உதவி தொகை மற்றும் 14 அத்திவாசிய மளிகை பொருட்களை வாங்கிச் செல்லும் வகையில் டோக்கன் விநியோகிக்கப்படுகிறது. ரேஷன் கடைக்கு வந்து பொருட்கள் எப்போது வாங்கவேண்டும் என்ற விவரம் டோக்கனில் தேதி, நேரம்  குறிப்பிட்டுள்ளது . டோக்கன் கிடைக்காதவர்கள், வெளியூர் சென்றுள்ளவர்கள் இந்த மாத இறுதி வரை தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா நிவாரண தொகை மற்றும் பொருட்களை ரேஷன் கடைகளுக்கு சென்று வாங்கிச் செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:

கொரோனா தடுப்பூசி தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

முத்துவேல்.கருணாநிதி.ஸ்டாலின் என்னும் நான்- முதலமைச்சராக பதவியேற்பு!

முழு ஊரடங்கு முடிவுக்கு வரும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

English Summary: 14 types of groceries in ration shops Rs.2000 cash Token started Published on: 11 June 2021, 03:20 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.