சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.
மழையால் பாதிப்பு (Damage by rain)
ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் பெய்த அதி கனமழை காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பெரும்பாலானப் பகுதிகளில் மழை நீர் தேங்கியதால், பல மணி நேரம் இருளில் தவிக்க நேர்ந்தது. மின்சாரம் தொடர்பான விபத்துக்களைத் தவிர்க்கும் வகையில், மின்வாரிய அதிகாரிகள், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டனர். இதனால் பல விபத்துகள் தவிர்க்கப்பட்டன.
அமைச்சர் ஆய்வு (Ministerial Review)
இந்நிலையில், சென்னை கோடம்பாக்கம் துணை மின்நிலையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:-
15 நாள் அவகாசம் (15 day grace period)
சென்னை,செங்கல்பட்டு,காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் மின்சாரக் கட்டணங்கள் அதற்கு உரிய தேதியில் கட்ட வேண்டும். 25,500 மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. 28,000 இணைப்புதாரர்களுக்கு மட்டுமே மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.
பல இடங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் இரவு முழுவதும் 4,000 பணியாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பாதிப்பு இல்லை (15 day grace period)
தேங்கியுள்ள மழைநீர் பாதிப்பு குறைந்த உடன் விரைவில் அனைத்து இடங்களிலும் மின் இணைப்பு வழங்கப்படும். டெல்டா மாவட்டங்களில் மின்விநோயகத்தில் எந்த பாதிப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
காற்றழுத்த தாழ்வு மண்டலம்-இன்று மாலை கரையைக் கடக்கிறது!
அதிதீவிரக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி 11-ந்தேதி சென்னையை நெருங்கும்: மிக மிக பலத்த மழை எச்சரிக்கை!
Share your comments