1. செய்திகள்

ஆகஸ்ட் 16 ஆம் தேதியும் விடுமுறை அறிவிப்பு: மக்கள் மகிழ்ச்சி!

Deiva Bindhiya
Deiva Bindhiya
16th August also holiday announcement: People happy!

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை நாடு முழுவதும் விடுமுறை என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால் வழக்கத்திற்கு மாறாக ஆகஸ்ட் 16 ஆம் தேதி விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆடி அமாவாசை மற்றும் குழித்துறை நகராட்சியால் நடத்தப்படும் வாவுபலி கொண்டாட்டத்தினை முன்னிட்டு 16.08.2023 (புதன் கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

அதேநேரம், இந்த அறிவிப்பில் 16.08.2023 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2023 செப்டம்பர் திங்கள் இரண்டாவது சனிக்கிழமை 09.09.2023 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும்.

மேலும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆடி அமாவாசை மற்றும் குழித்துறை நகராட்சியால் நடத்தப்படும் வாவுபலி கொண்டாட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881 (Under Negotiable Instruments Act 1881) -இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 16.08.2023 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என்.ஸ்ரீதர், அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

செய்தி சுருக்கம், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆடி அமாவாசை மற்றும் வாவுபலி கொண்டாட்டங்களை முன்னிட்டு, ஆகஸ்ட் 16, 2023 தினத்தன்றும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களும், கல்வி நிறுவனங்களும் செப்டம்பர் 9, 2023 அன்று வேலை நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை நாளில் அரசு தொடர்பான அவசர வேலைகளை உள்ளூர் கருவூலங்கள் கையாளும், என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என்.ஸ்ரீதர், உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க:

"விவசாயிகள் இந்தியாவுடன் இணைய 'ஃபார்மர் தி ஜர்னலிஸ்ட்டில்' உடன் இணையுங்கள்!

தோட்டக்கலை தாவரங்களை இறக்குமதி செய்வதற்கு உரிமம் பெற எவ்வாறு பதிவு செய்வது?

English Summary: 16th August also holiday announcement: People happy! Published on: 14 August 2023, 02:16 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.