தேசிய தோட்டக்கலை வாரியத்தின் (NHB) இயக்குநர்கள் குழுவின் 32வது கூட்டம், மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சரும், வாரியத்தின் தலைவருமான நரேந்திர சிங் தோமர் தலைமையில் 14 டிசம்பர் புது தில்லியில் நடைபெற்றது. அதில்,
விவசாயிகளுக்கு தோட்டக்கலை திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கும் செயல்முறையை எளிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இரண்டு கட்டங்களுக்குப் பதிலாக, இப்போது ஒப்புதல் செயல்முறை ஒரே கட்டத்தில் முடிக்கப்படும் மற்றும் இது முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கப்படும், குறைந்தபட்ச ஆவணங்களே இதற்கு தேவைப்படும், இதன் விளைவாக விவசாயிகள் எந்த பிரச்சனையும் சந்திக்க மாட்டார்கள். குறிப்பிடத்தக்க வகையில், 6 முதல் 8 மாதங்களில் அனுமதிக்கப்பட்ட பல திட்டங்கள், இப்போது 45 நாட்களில் அனுமதிக்கப்படும்.
2.விவசாயிகளுக்கு 35% அதாவது 17,50.000 கோழிப்பண்ணை மற்றும் பால்பண்ணை அமைக்க வழங்கல்
காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் மூலம் புதிய தொழில் தொடங்க விளையும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு 50 லட்சம் கடன் தொகை மானியத்தில் 35% ஆதாவது 17 லட்சத்து ஐம்பதாயிரம் மானியத் தொகை ஆகும். விவசாயிகள் விவசாய நிலங்களில் கோழிப்பண்ணை மற்றும் பால்பண்ணை அமைக்க வழங்கப்படுகிறது. விவசாயிகள் அவர்களது மாவட்ட தொழில் மையத்தை அணுகி மேலும் விபரங்களை பெற்று பயன் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.
3.சிறுதானிய பிஸ்கட்டுகள் தயாரித்தல் பயிற்சி
வேளாண்மை அறிவியல் நிலையம், கட்டுப்பாக்கம் நிலையப் பயிற்சி 2022 சார்பாக பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. முன்பாக விஞ்ஞான முறையில் வெள்ளாடு வளர்ப்பு என்ற தலைப்பில் ஒரு பயிற்சியும், கூட்டு மீன் வளர்ப்பு மற்றும் மீன் குஞ்சுகள் வளர்ப்பு தொழில்நுட்பம் என்ற தலைப்பில் ஒரு பயிற்சியும் நடைபெற்றுள்ளது. அந்த வகையில், அடுத்ததாக வருகிற 15 டிசம்பர் அன்று சிறுதானிய பிஸ்கட்டுகள் தயாரித்தல் பயிற்சி நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ள செங்கல்பட்டு மற்றும் காஞ்சிப்புரம் மாவட்ட விவசாயிகள் மட்டும் கலந்து கொள்ளலாம்.
4.சூரிய சக்தியில் இயங்கும் தினை செயலாக்க அலகு நிறுவ விவசாயிகளுக்கு 35% மானியம்
SELCO India, விருதுநகர் மாவட்ட, மாவட்ட ஆட்சியருடன் இணைந்து 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் "தமிழகத்தின் தினை சுற்றுச்சூழலை வளப்படுத்துதல் மற்றும் 2023 இல் தினை மாநாட்டிற்கான திட்டமிடல்" தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. தமிழ்நாட்டின் தினை விவசாயிகள் மற்றும் பெண் தொழில்முனைவோருக்கு அறுவடைக்கு பிந்தைய மற்றும் மதிப்பு கூட்டுவதற்காக சூரிய சக்தியில் இயங்கும் தினை மதிப்பு சங்கிலியை SELCO இந்தியா நிறுவியுள்ளது. சூரிய சக்தியில் இயங்கும் தினை செயலாக்க அலகு நிறுவ விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கு 35% மானியம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இத்திட்டம் பற்றிய கூடுதல் தகவலுக்கு, திரு.நம்பிராஜன் மூத்த மேலாளர்- மக்கள் தொடர்பு மற்றும் அவுட்ரீச், SELCO இந்தியா அவர்களின் எண் 9600620404, 9894271713.
5.கால்நடை வளர்ப்பு பயிற்சி
சேலம் மாவட்டத்தில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் அருகில் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் *டிசம்பர் 22, 2022* ல், வெள்ளாடு வளர்ப்பு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. *காலை 10.30 மணி* அளவில் பயிற்சி மையத்தில் நடைபெறும். தொடர்பு எண்: 0427 2410408
6.தென்பெண்ணை ஆற்றில் இரசாயன நுரை: உடனே நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை!
ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரை பெருக்கெடுத்து இருப்பதால் அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடக மாநில எல்லையில் உள்ள ஓசூரில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கெலவரப்பள்ளி அணையின் மொத்த உயரமான 44.28 அடியில் தற்போது 40 அடிக்கு மேல் இருப்பு உள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு கருதி அணையில் இருந்து 1060 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில், திடீரென தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரை பெருக்கெடுத்து துர்நாற்றத்துடன் செல்வதால் பரபரப்பு நிலவுகிறது. ரசாயன நுரை பெருக்கெடுத்து இருப்பதால் அதிர்ச்சி அடைந்துள்ள விவசாயிகள் கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் தண்ணீரில் அம்மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளின் கழிவுநீர் கலக்கப்பட்டு இருக்கலாம் என்றும் ஐயம் தெரிவிக்கின்றன.
7.சோலார் பம்பு செட் அமைக்க 70% மானியம்: விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்!
தமிழக அரசு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் முதல்-அமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் (சோலார் பம்பு செட்) திட்டத்தின் கீழ், மின் இணைப்பு இல்லாத பாசன ஆதாரமுள்ள விவசாயிகளுக்கு 10 குதிரை திறன் வரையிலான மின் கட்டமைப்புடன் சாராத தனித்து சோலாரில் இயங்கும் பம்பு செட்டுகள் 70 சதவீத மானியத்தில் அமைக்கும் திட்டம் (40 சதவீதம் தமிழக அரசின் மானியம் மற்றும் 30 சதவீதம் மத்திய அரசின் மானியம்) 2021-22-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் முதல் தவணையாக 2 ஆயிரம் சோலார் பம்பு செட்டுகள் ரூ.43.556 கோடி மானியத்தில் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
8. கரும்பு பொருட்களின் லாபகரமான விலை விரைவில் உயரும்: முதல்வர் பசவராஜ பொம்மை உறுதி
கரும்பு பொருட்களின் லாபத்தை அரசு விரைவில் ஆய்வு செய்து கூடுதலாக 50 ரூபாய் உயர்த்தும் என முதல்வர் பசவராஜ பொம்மை தெரிவித்தார். விவசாய தலைவர்களுடனான சந்திப்புக்கு பின் அவர் பேசினார். கரும்பு அறுவடை செய்வதால் போக்குவரத்து செலவு குறைவதுடன் விவசாயிகளுக்கு அதிக விலை கிடைக்கும். எடையில் முறைகேடுகளை தடுக்க அனைத்து சர்க்கரை ஆலைகள் முன்பும் ஏ.பி.எம்.சி.கள் மூலம் அரசு மூலம் எடை இயந்திரங்கள் அமைக்கப்படும். இதனால், போராட்டத்தை கைவிடுமாறு விவசாயிகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து மாநில விவசாயிகள் அமைப்புகளின் கூட்டமைப்பு மாநில தலைவர் குருபுரு சாந்தகுமார் கூறியதாவது: கரும்பு விவசாயிகள் 23 நாட்களாக கடையடைப்பு போராட்டம் நடத்தியும் அரசு தீவிர சிந்தனையில் ஈடுபடவில்லை. கரும்பு எப்ஆர்பி விகிதப்படி உற்பத்தி செலவு விவசாயிகளுக்கு வரவில்லை என அதிருப்தி தெரிவித்தார்.
9.இன்றைய பெட்ரோல்-டீசல் விலை பற்றிய செய்தி
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக 2 டாலர் அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை காலை அரசு எண்ணெய் நிறுவனங்களும் பெட்ரோல், டீசல் விலையை அறிவித்தன. டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் சீராக வைத்துள்ளன. அந்த வகையில், சென்னையில் பெட்ரோல் விலை ரூ.102.63 ஆக உள்ளது.
10.வானிலை தகவல்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகவுள்ளது. வருகிற 17 டிசம்பர் வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே நேரம் 16 டிசம்பர் 2022 தென்கிழக்கு வங்ககடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க:
விவசாயிகளுக்கு மனக்கன்று விநியோகம்| பள்ளியில் Kitchen Garden| ஆவின் ஆலை சேலத்தில்| 2023 தினை ஆண்டு
PMFME: ரூ.10 லட்சம் மானியம்| கரும்பு விவசாயிகள் போராட்டம்| என் முன்னாடி போட்டோ ஷூட்டா? கடுப்பான யானை
Share your comments