மத்திய அரசின் வங்கி சீர்திருத்த நடவடிக்கைகளைக் கண்டித்து வரும் 15,16 தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
போராட்ட அறிவிப்பு (Notice of protest)
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் சங்கங்கள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
மார்ச் 15,16 (March 15,16)
எஸ்பிஐ வங்கி தரப்பில், இந்திய வங்கிகள் சங்கம் (Indian Banks Association) மற்றும் யுனைடெட் ஃபோரம் (United Forum of Bank Unions) சார்பில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு மார்ச் 15 மற்றும் 16 ஆம் தேதி அழைப்பு விடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைநிறுத்த போராட்டத்தால், நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் அனைத்துக் (State Bank of India) கிளைகளிலும் அலுவலகங்களிலும் பணிகள் பாதிக்கப்படக்கூடும் என்று எஸ்பிஐ (SBI) தரப்பில் கூறப்பட்டுள்ளது.
4 நாள் பாதிப்பு (4 day exposure)
எனவே, வாடிக்கையாளர்களுக்கு சில அவசர வங்கி வேலைகள் இருந்தால், அதை 12ம் தேதிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் மார்ச் 13 (இரண்டாவது சனிக்கிழமை ) அன்று வங்கிகளுக்கு விடுமுறை என்பதால், அடுத்த நாள் 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பின்னர் 15 வது 16 ஆம் தேதி (திங்கள், செவ்வாய்-வங்கி வேலைநிறுத்தம்). எனவே தொடர்ந்து 4 நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கப்படக்கூடிய சூழல் உள்ளதால், வாடிக்கையாளர்கள் முன்னெச்சரிக்கையாக தங்கள் வேலைகளை முடித்துக்கொள்ளுங்கள்.
தொழிற்சங்கங்கள் பங்கேற்பு (Trade union participation)
மார்ச் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் வங்கி வேலைநிறுத்தத்திற்கு ஒன்பது தொழிற்சங்கங்களின் கூட்டு அமைப்பான யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் (UFBU), அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (AIBEA), அகில இந்திய வங்கி அலுவலர்கள் கூட்டமைப்பு (AIBOC), வங்கி ஊழியர்களின் தேசிய கூட்டமைப்பு (NCBE), அகில இந்திய வங்கி அலுவலர்கள் சங்கம் (AIBOA) உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்க உள்ளன.
இதேபோல், இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு (BEFI), இந்திய தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பு (INBEF), இந்திய தேசிய வங்கி அதிகாரிகள் காங்கிரஸ் (INBOC), வங்கித் தொழிலாளர்களின் தேசிய அமைப்பு (NOBW) மற்றும் வங்கி அதிகாரிகளின் தேசிய அமைப்பு (NOBO) போன்ற சங்கத்தினரும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள உள்ளதால், வங்கிப்பணிகள் முடங்க வாய்ப்பு உள்ளது.
மேலும் படிக்க...
SBI வங்கியில் விவசாயக் கடனுக்கான வட்டி விகிதம் எவ்வளவு?- விபரம் உள்ளே!
சம்பளம் மாதிரி மாத வருமானம் தரும் SBI-யின் சூப்பர் திட்டம்!
தமிழகம் வர இனி E-Pass கட்டாயம்- அதிரடி உத்தரவு!
Share your comments