1. செய்திகள்

கோடை வெயிலுடன் வெள்ளை-ஈ தாக்குதல் அதிகரிப்பு: கவலையில் தென்னை விவசாயிகள்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary
Coconut Tree
Credit By : The Asian Age

தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், பல்வேறு பகுதிகளில் பயிர் நிலங்களில் வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம், ஆனைமலை ஒன்றிய பகுதிகளில் 58 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்னையில் வெள்ளை ஈக்கள் அதிக அளவில் சேதத்தை ஏற்படுத்துகிறது. தாக்குதலுக்குள்ளான மரங்களில், மகசூல் குறைந்து விவசாயிகள் கடுமையாக பாதிக்கின்றனர்.

கடந்த ஆண்டில் 78% தென்னை மரங்கள் பாதிப்பு

கடந்த கோடை காலத்தில், வெள்ள ஈக்களின் தாக்குதல் மிக அதிகமாக இருந்தது. ஆனைமலை ஒன்றியத்தில், 78 சதவீதத்துக்கும் மேற்பட்ட மரங்களில் இந்த வகை ஈக்களின் தாக்குதல் காணப்பட்டது, நாட்டு மரங்களில் குறைவாக இருந்தது.

நடப்பு ஆண்டிலும் பாதிப்பு அதிகரிப்பு

இந்நிலையில், தற்போது கோடை துவங்கியுள்ளதால் நடப்பாண்டும் கடும் வெயில் நிலவி, ஒன்றியம் முழுவதிலும் வெள்ளை ஈக்களின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மழை இல்லாததால், இது அதிக வீரியத்துடன், மரங்களை தாக்கி வருகிறது.தென்னை மட்டுமின்றி வாழை, கோகோ உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களையும் தாக்கி வருகிறது. இதனால், விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

ஒருங்கிணைந்த மேலாண்மை முறையை பின்பற்ற அறிவுரை

இதே நிலை தொடர்ந்தால், நடப்பாண்டு ஒன்றியம் முழுவதிலும், 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட மரங்களில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. விவசாயிகள் ஒருங்கிணைந்த மேலாண்மை முறையை பின்பற்ற, அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

இதுதொடர்பாக, கோவை வேளாண் இணை இயக்குனர் சித்ராதேவி வெயிட்டுள்ள அறிக்கையில்,

  • மஞ்சள் நிறம் வெள்ளை ஈக்களை கவரும் என்பதால், தோப்பில் ஏக்கருக்கு, பத்து மஞ்சள் பாலித்தீன் ஒட்டுப்பொறிகள், ஏக்கருக்கு, இரண்டு விளக்குப்பொறிகள் வைக்க வேண்டும்.

  • 'என்கார்சியா' ஒட்டுண்ணி, பொறி வண்டுகள் போன்ற இயற்கை எதிரிகளை பயன்படுத்த வேண்டும்.

  • 'கிரைசோபெர்லா' இரை விழுங்கிகளின் முட்டைகளை ஏக்கருக்கு, 400 பயன்படுத்த வேண்டும்.

  • தென்னைக்கு இடையே தட்டைப்பயறு, சாமந்தி, சூரிய காந்தி பயிரிடலாம்.

  • இந்த முறைகளை கையாண்டு, கோடையில் வெள்ளை ஈக்கள் தாக்குதலை குறைக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

விவசாயிகளுக்கு வட்டியில்லா வேளாண் கடன் ! விபரம் உள்ளே!

தென்னை சாகுபடி தொழில்நுட்ப தொலைதூரப் படிப்பு!

பயிர்கள் செழிக்க கோடை உழவு அவசியம் - விவசாயிகளுக்கு ஆலோசனை!

English Summary: Increase in white-fly attack in summer sun: Coconut farmers worried Published on: 12 March 2021, 02:58 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.