திருமணம் உள்ளிட்ட அதிக மக்கள் கூடும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்புவோர் தடுப்பூசியின் இரண்டு 'டோஸ்'களையும் செலுத்தி இருக்க வேண்டியது கட்டாயம்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் முதல் மற்றும் 2-வது அலைகள் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. இதனால், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், லட்சக்கணக்கானோர் பாதிப்புக்கு ஆளாகி, உடல் ரீதியான பாதிப்புடன் வாழ்ந்து வருகின்றனர்.
அதிகரிக்கும் அச்சம் (Fear of increasing)
இதன் காரணமாக, 3-வது அலை குறித்த அச்சம் மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நம் நாட்டில் பண்டிகை காலம் துவங்க இருப்பதால், அது கொரோனா தொற்று பரவலை மீண்டும் வேகமெடுக்க வழிவகுக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: கொரோனாவால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் இன்னும் இரண்டாம் அலை முடிவுக்கு வரவில்லை.
தடுப்பூசி (Vaccine)
நாட்டில், 18 வயதுக்கு மேற்பட்டோரின் மொத்த மக்கள் தொகையில் 16 சதவீதம் பேருக்கு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டு விட்டன. 54 சதவீதம் பேருக்கு ஒரு டோஸ் போடப்பட்டு விட்டது.சிக்கிம், ஹிமாச்சல பிரதேசம், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் டோஸ் செலுத்தப்பட்டு விட்டது.
பண்டிகைக் காலம் துவங்க உள்ளதால் கொரோனா வைரசால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனவே மக்கள் முறையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
மத்திய அரசு அறிவிப்பு (Federal Government Notice)
திருமணம், காதணி விழா, பிறந்தநாள் கொண்டாட்டம் உள்ளிட்ட விழாக்கள் நடக்கும் பொது இடங்களில் கூட்டம் சேர்வதைத் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகளில் பங்கேற்க விரும்புவோர், தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்தி இருக்க வேண்டியது கட்டாயம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
அச்சச்சோ மீண்டும் கட்டுப்பாடுகளா? கொரோனாவை விரட்ட புதியத் திட்டம்!
Share your comments