நாடு முழுவதும் 1.67 கோடி விவசாயிகள் e-NAM மின்னணு சந்தையின் கீழ் பதிவு செய்துள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது
நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் விவசாயிகள் பங்கு குறிப்பாக இந்த கோவிட்-19 காலத்தில் அளப்பரியது. விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.இதன் ஒருபகுதியாக அறிமுகப்படுத்தப்பட்ட e-NAM தளத்தில் இந்தியா முழுவதும் 1.67 கோடி விவசாயிகள், 1.45 லட்சம் வர்த்தகர்கள் உள்பட 1.69 கோடி பேர் பதிவு செய்துள்ளனர்.
தமிழக விவசாயிகள் (TamilNadu farmers)
e-NAM எனப்படும் தேசிய வேளாண் சந்தை என்னும் வேளாண் பொருட்களுக்கு தற்போது உள்ள சந்தைகளை ஒருங்கிணைக்கும் ஒரு நாடு ஒரே சந்தை திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த 2016ம் ஆண்டு தொடங்கிவைக்கப்பட்டது. தமிழகத்தில், 2.15 லட்சம் விவசாயிகள், 2912 வர்த்தகர்கள், 98 விவசாயிகள் உற்பத்தி அமைப்புகள், 33 கமிசன் முகவர்கள் உள்பட 2.19 லட்சம் பேர் இதில் பதிவு செய்து உள்ளனர்.
நோக்கம்
வேளாண் பொருள்களுக்காக ஒருங்கிணைந்த தேசிய சந்தையை உருவாக்குவது என்பதே e-NAM தளத்தின் முக்கிய நோக்கம். தற்போதைய ஒருங்கிணைந்த சந்தைகளின் நடைமுறை களை ஒழுங்குபடுத்துவதன் மூலம் வேளாண் சந்தைப்படுத்துதலில் ஒரே சீரான நடைமுறையை உருவாக்க முடியும் என நம்பப்படுகிறது. எனவே விவசாயிகள் அல்லது வர்த்தகர்கள் http://www enam.gov.in அல்லது கைபேசி செயலி மூலம் e-NAM தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். நேரடிச் சந்தை மண்டி பதிவு மூலமும் பதிவு செய்யலாம்.
கட்டணம் இல்லை (No fare)
இ-நாம் பதிவுக்கு கட்டணம் ஏதுமில்லை. பெயர். பாலினம், முகவரி, பிறந்த தேதி, கைபேசி எண், வங்கி கணக்கு விவரங்கள் தெரிவிக்கப்பட வேண்டும். தற்போது 175 பொருட்கள் e-NAM வர்த்தகத்தில் இடம் பெற்று உள்ளன.
பாசுமதி அரிசி, கோதுமை, பார்லி, குதிரை தானியம் உள்ளிட்ட 26 உணவுப் பொருட்கள், ஆமணக்கு, பருத்தி, கடுகு, வேம்பு போன்ற 14 எண்ணெய் வித்துக்கள், கொய்யா, மா, பலா, வாழை, ஆப்பிள் திராட்சை போன்ற பழங்கள், தக்காளி, உருளை, வெங்காயம், பூசணி, இஞ்சி போன்ற 50 காய்கறிகள், மிளகு, ஏலக்காய், மஞ்சள் போன்ற 16 மசாலா பொருட்கள் உள்ளட்டவை இதில் அடங்கும். இதன் மூலம் அதிக விற்பனையாளர்கைள அணுகக் கூடிய வாய்ப்பு விவசாயிகளுக்கு கிடைக்கிறது.
மேலும் படிக்க...
இயந்திரம் மூலம் நடவுக்கு ரூ.5 ஆயிரம் மானியம்- வேளாண்துறை அறிவிப்பு!
துணை மருத்துவப் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை- ஆன்லைன் கவுன்சிலிங் துவக்கம்!
Share your comments