தமிழக மக்கள் மின் கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தும் வசதி ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. முன்கூட்டியே செலுத்தப்படும் மின் கட்டணத்திற்கு வழங்கப்படும் வட்டியை, 2022 - 23ம் நிதியாண்டிற்கு, 2.70 சதவீதமாக நிர்ணயித்து, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மின் கட்டணம் (Electricity Bill)
தமிழக மின் வாரியம், வீடுகளுக்கு இரு மாதங்களுக்கு ஒரு முறை மின் பயன்பாடு கணக்கெடுக்கிறது. கணக்கெடுத்த 20 தினங்களுக்குள் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும். இல்லையேல், அபராதத்துடன் சேர்த்து கட்டணம் செலுத்த வேண்டும்.
வெளியூர் செல்வது உள்ளிட்ட காரணங்களால், குறிப்பிட்ட தொகையை முன்கூட்டியே மின் கட்டணமாக செலுத்தும் வசதி உள்ளது. அதற்கு மின் வாரியம் ஆண்டு வட்டி (Interest) வழங்குகிறது. இதை, ஒழுங்குமுறை ஆணையம், ரிசர்வ் வங்கி வைப்பு நிதிகளுக்கு நிர்ணயிக்கும் வட்டியை பொறுத்து ஆண்டுதோறும் நிர்ணயம் செய்கிறது.
வட்டி நிர்ணயம் (Interest)
நடப்பு, 2021 - 22ம் நிதியாண்டிற்கு முன்கூட்டியே செலுத்தும் மின் கட்டணத்திற்கு, 2.70 சதவீதம் வட்டி நிர்ணயிக்கப்பட்டது. அதே வட்டியை வரும், 2022 - 23ம் நிதியாண்டிற்கும் நிர்ணயித்து தற்போது, ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது, 2020 - 21ல் 3.25 சதவீதமாக இருந்தது.
மேலும் படிக்க
சமையல் எண்ணெய் தயாரிப்பில் நுண்ணுயிரிகள்!
காலாவதியான குளிர்பானத்தை வைத்திருந்தாலோ விற்பனை செய்தாலோ அபராதம்!
Share your comments