1. செய்திகள்

2-வது திருமணமா? அரசு ஊழியர்களுக்கு ஆபத்து!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
2nd marriage? Danger to government employees!

முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது 2-வது திருமணம் செய்யும் அரசு ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அதிரடி உத்தவு பிறப்பித்துள்ளது. இதுபோன்ற விதிகள் ஏற்கனவே அமலில் இருக்கும் பட்சத்தில், அரசு சார்பில் வெளிப்படையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது அரசு ஊழியர்கள் 2-வது திருமணம் செய்தால் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

1973 தமிழ்நாடு அரசு பணியாளர் சட்ட விதிகளின்படி, பணியில் உள்ள அரசு ஊழியர் முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது 2-வது திருமணம் செய்யக்கூடாது.

அவ்வாறு 2-வது திருமணம் செய்வது ஒழுக்கக் கேடானது என்றும் அரசு மரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயல்.மேலும் அரசு ஊழியர் 2-வது திருமணம் செய்வதால் சட்ட ரீதியாக முதல் மனைவிக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைப்பதில்லை என்று குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து பல புகார்கள் வந்துள்ளன.

எனவே முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது 2-வது திருமணம் செய்யும் அரசு ஊழியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

முட்டைக்குள்ளும் Diet இருக்கு- தெரியுமா உங்களுக்கு!

நோயாளி வயிற்றுக்குள் சிக்கிய கத்திரி- அறுவை சிகிச்சையில் நடந்த அலப்பறை!

English Summary: 2nd marriage? Danger to government employees! Published on: 21 April 2022, 09:28 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.