கடந்த இரண்டு வருடங்களில் 70 எத்தனால் திட்டங்களுக்கு ரூ.3,600 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சர்க்கரை பருவத்தின் போது சராசரியாக 320 லட்சம் மெட்ரிக் டன்கள் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டு, அதில் 260 லட்சம் மெட்ரிக் டன்கள் சர்க்கரை உள்நாட்டில் பயன்படுத்தப்படும். மீதமிருக்கும் 60 லட்சம் மெட்ரிக் டன்கள் சர்க்கரை விற்கப்படாமல், சர்க்கரை ஆலைகளுக்கு வரவேண்டிய ரூபாய் 19,000 கோடி நிதியை ஒவ்வொரு ஆண்டும் தடுத்துவிடும். இதனால் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை அதிகரித்துக் கொண்டே போனது.
தேவைக்கு அதிகம் உள்ள சர்க்கரையை ஏற்றுமதி செய்யுமாறு சர்க்கரை ஆலைகள் ஊக்கப் படுத்தப்பட்டு, இது சார்ந்த நடவடிக்கைகளுக்கு அரசு ஆதரவு அளித்து வருகிறது.இருப்பினும், இதற்கு ஒரு நீண்ட காலத் தீர்வாக, சர்க்கரை மற்றும் கரும்புகளை எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்களுக்கு, பெட்ரோலுடன் எத்தனால் கலப்பதற்காக வழங்குமாறு அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.
இதன் மூலம் வெளிநாடுகளை சார்ந்து இல்லாமல், மாசில்லா எரிபொருள் உள்நாட்டிலேயே கிடைப்பதோடு விவசாயிகளுக்கும் கூடுதல் வருமானம் கிடைக்கிறது.கடந்த இரண்டு வருடங்களில் 70 எத்தனால் திட்டங்களுக்கு ரூ.3,600 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் படிக்க...
தரமான விதை உற்பத்திக்கு அதிக விலை: உளுந்து விதைப்பண்ணை அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு!!
Share your comments