1. செய்திகள்

மத்திய வேளாண் சட்டங்களை முறியடித்திட ராஜஸ்தானில் 3 வேளாண் சட்டங்கள் நிறைவேற்றம்!

KJ Staff
KJ Staff

Credit : Theekadhir

மத்திய வேளாண் சட்டங்களை முறியடிக்கும் விதத்தில் ராஜஸ்தான் (Rajasthan) மாநில சட்டமன்றத்தில் மூன்று வேளாண் சட்டங்கள் (Agricultural laws) திங்கள் அன்று நிறைவேற்றப்பட்டது. சனிக்கிழமையன்று அறிமுகப்படுத்தப்பட்ட இச்சட்டமுன் வடிவுகள் ஒன்பது மணி நேரம் விவாதம் நடைபெற்றபின் குரல் வாக்கெடுப்பில் (voice poll) நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் பஞ்சாப்பிற்கு அடுத்ததாக, ராஜஸ்தான் மாநிலம் மத்திய வேளாண் சட்டங்களை நிராகரித்துள்ளது.

மூன்று சட்டமுன் வடிவுகள்:

மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக மாநிலத்தில், விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் (Farmers Production Trade) மற்றும் வணிகம் (மேம்படுத்துதல் மற்றும் வசதிசெய்து தருதல்) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மீது விவசாயிகள் அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் (சிறப்பு ஷரத்துக்கள்) ஆகிய மூன்று சட்டமுன்வடிவுகள் (Bills) கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.

அமைச்சர் சாந்தி தாரிவால்:

சட்டமுன்வடிவுகள் மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து உரையாற்றிய நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் சாந்தி தாரிவால் (Shanti Dhariwal), “மத்தியில் பாஜக தலைமையில் உள்ள அரசாங்கம், விவசாயிகளை ஒழித்துக் கட்டிவிட்டு, ஒட்டுமொத்த விவசாயத் துறையையும் பெரும் கார்ப்பரேட்டுகள் (Corporate) வசம் ஒப்படைக்க முடிவு செய்திருக்கிறது. இதனை, ராஜஸ்தானில் நிறைவேற்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம். 95 சதவீதத்திற்கும் அதிகமான விவசாயிகள், தாங்கள் உற்பத்தி (Production) செய்த விவசாய விளைபொருள்களுக்கு, குறைந்தபட்ச ஆதார விலையைப் பெற முடியவில்லை. நாங்கள் மேற்கொண்டுள்ள திருத்தச் சட்டங்கள் விவசாயிகளைப் பாதுகாத்திடும்,” என்றும், உரையாற்றுகையில், “மத்தியச் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால், அவை பொது விநியோக முறையைக் (Public distribution system) கடுமையாகப் பாதித்திடும். ஏனெனில், அரிசி மற்றும் கோதுமை போன்ற அத்தியாவசியப் பொருள்கள் அரசாங்கத்தால் கொள்முதல் செய்வதற்குக் கிடைத்திடாது.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அய்யாக்கண்ணு வழக்கு!

இளம் வழக்கறிஞர்களுக்கு 3000 ரூபாய் உதவித்தொகை! தமிழக அரசின் புதியத் திட்டம்!

சிறு வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கும் திட்டம்! தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

English Summary: 3 agricultural laws passed in Rajasthan to break central agricultural laws!

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.