தமிழக சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது.கூட்டத்தின் போது சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி வேளாண் சட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார் மேலும் இதனை திரும்ப பெரும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். இந்த வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட நாள் முதல், உழவர் நலனுக்கு எதிரான இந்தச் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என திமுக பல்வேறு தருணங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளின் உணர்வுகள் மற்றும் விருப்பத்தை நிறைவேற்ற கூடிய வகையில் இந்த கூட்டம் அமைய வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தி இந்த அவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற தெளிவாக முடிவு செய்திருக்கிறது.
ஆனால் அவையினுடைய முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, நிறைவேற்றுவது உகந்ததாக இருக்காது என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின் வரவிருக்கக்கூடிய வரவு-செலவுத் திட்டக் கூட்டத் தொடரின்போது இந்த தீர்மானத்தைக் நிறைவேற்றுவோம் என்றும் நிச்சயமாக ஒன்றிய அரசினுடைய வேளாண் சட்டங்களுக்கு எதிரான தமிழ்நாடு அரசினுடைய எதிர்ப்பை முன்னிறுத்தி அவற்றைத் திரும்பப்பெற ஒன்றிய அரசை வலியுறுத்துவோம் என்று உறுதியோடு தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து நாடு முழுவதும் இருக்கக்கூடிய சிறுபான்மையினரின் நலனை வெகுவாக பாதித்து அச்ச உணர்வை ஏற்படுத்தி வரும் குடியுரிமை திருத்தச் சட்டமும் திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்துவதற்கான தீர்மானத்தையும் வரவிருக்கக்கூடிய பட்ஜெட் கூட்டத் தொடரின்போது நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்!
Share your comments