1. செய்திகள்

இந்தந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் - வானிலை மையம்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடர்பான நிலவரம் குறித்து வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வானிலை முன்னறிவிப்பு 

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று அரியலூர், பெரம்பலூர், கடலூர்,தேனி திண்டுக்கல் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிந லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்

நாளை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுரை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்

வரும் 24 முதல் 26ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய(நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

இன்று முதல் 26ஆம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் அவ்வப்போது 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

9 மாவட்டங்களில் நடைபெறாமல் இருந்த உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதி மன்றம் உத்தரவு

மீண்டும் கலைஞரின் உழவர் சந்தை திட்டம்



English Summary: Heavy rain with thunder shower and lightning in these districts says Imd chennai

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.