சென்னை மாநகராட்சியின் சார்பில் 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 3 நடமாடும் அம்மா உணவகங்களைப் (Amma restaurants)பெருநகர சென்னை மாநகராட்சியின் பயன்பாட்டிற்கு வழங்கிடும் விதமாக, அவ்வாகனங்களுக்கான சாவிகளை முதல்வர் பழனிசாமி இன்று ஓட்டுநர்களுக்கு வழங்கி இயக்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில், அதிக அளவில் அம்மா உணவகங்கள் இயங்கி வருகிறது. அம்மா உணவகம், மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதால், உணவகங்களை விரிவுபடுத்த நடமாடும் அம்மா உணவகங்களை தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். இதனால், சிலருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளது.
குப்பைகளை உறிஞ்சி அகற்றும் உபகரணங்கள்:
சென்னை மாநகராட்சியின் சார்பில் 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 3 நடமாடும் அம்மா உணவகங்கள், 4 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குப்பைகளை உறிஞ்சி அகற்றும் உபகரணங்கள் பொருத்தப்பட்ட 15 சிறியவகை வாகனங்களை, பெருநகர சென்னை மாநகராட்சியின் பயன்பாட்டிற்கு வழங்கிடும் விதமாக, அவ்வாகனங்களுக்கான சாவிகளை இன்று 5 ஓட்டுநர்களுக்கு வழங்கினார்.
கூட்டுக் குடிநீர் திட்டம்
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் (Tamil Nadu Drinking Water Drainage Board) மூலமாக 162 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை மற்றும் தேனி ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 250 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி (CM Palanisamy) இன்று காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
மத்திய வேளாண் சட்டங்களை முறியடித்திட ராஜஸ்தானில் 3 வேளாண் சட்டங்கள் நிறைவேற்றம்!
டெங்கு காய்ச்சலைத் தடுக்க 5 ஆயிரம் கம்பூசியா மீன்கள் உற்பத்தி!
Share your comments