அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களுக்குப் புத்தாண்டுப் பரிசாக அமைந்துள்ளதால், அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. அகவிலைப்படி உயர்வின் மூலம் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.
மாநில அரசுகள்
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தினால், அதன் அடிப்படையில் மாநில அரசுகளும், தங்கள் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்குவது வழக்கம்.
நடவடிக்கை
அந்தவகையில் தற்போது தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழக அரசு அகவிலைப்படியை அறிவித்துள்ளது. அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் அகவிலைப்படியை உயர்த்துவது குறித்து கலந்தோலோசிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
38%மாக உயர்வு
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஏற்கெனவே 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி, இன்று முதல் 38 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதில் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.
மேலும் படிக்க…
குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை- விபரம் உள்ளே!
சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி- அதிரடியாக உயர்த்தியது மத்திய அரசு!
Share your comments