ஏழை மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றி வைக்கும் முயற்சியாக திருமணத்திற்கு, தாலிக்கு தங்கம் என்றத் திட்டம் தமிழக அரசு செயற்படுத்தி வந்தது. இந்நிலையில், கோவில்களில் திருமணம் செய்துகொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 கிராம் தங்கத் தாலி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கோவில்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களின் யாரவது ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவர்களுக்கு தங்கம் வழங்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
தாலி தங்கம்
தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட மாதந்தோறும் ரூ. 2000 உதவித்தொகையும், அரசு துறை வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடும், மேலும் உயர்படிப்பிற்கு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளின் எதிர்காலத்தை மேம்படுத்தும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டுள்ளார்.
அதில் இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் இயங்கி வரும் கோவில்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவர்களுக்கு 4 கிராம் தங்கத்தில் தாலி திருக்கோவில் சார்பில் வழங்கப்படும் என இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
உதவியாக
இதன் மூலம் மாற்றுத்திறனாளிகளின் திருமண வாழ்க்கை நல்லபடியாக இருக்கும் எனவும், அவர்களின் எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
பெண்களுக்கு ரூ. 6000 வழங்கும் மத்திய அரசு!
சுட்டெரிக்கும் சூரியன்-கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்கும் வழிகள்!
Share your comments