தமிழகத்திற்கு மேலும் 2 லட்சம் டோஸ் கோவிஷீல்டு, 2 லட்சம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் (Vijaya Baskar) தெரிவித்து உள்ளார்.
தடுப்பூசி வருகை
மாநில தடுப்பூசி சேமிப்பு கிடங்கிற்கு கூடுதலாக 4 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வந்துள்ளன. தலா 2 லட்சம் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளன. அவை, விநியோகத்திற்காக மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். தடுப்பூசி (Vaccine) தான் உயிரை காக்கும். தடுப்பூசி போட்டு கொள்ளுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
தடுப்பூசி இலவசம்
மருந்து நிறுவனங்களிடம் வாங்கும், இரண்டு கொரோனா தடுப்பூசிகளும், மாநிலங்களுக்கு தொடர்ந்து மத்திய அரசு இலவசமாக வழங்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்யும் சீரம் நிறுவனம், அதன் விலையை சமீபத்தில் அறிவித்தது. அதன்படி, , மத்திய அரசுக்கு ரூ.150 ஆகவும், மாநில அரசுக்கு ரூ.400 ஆகவும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 ஆகவும் நிர்ணயம் செய்துள்ளது. இதற்கு பல அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தடுப்பூசியை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என கேரள முதல்வர் தெரிவித்திருந்தார்.
இந்தியாவிலேயே தயாரித்த மருந்து, ஆனால், இந்தியாவில் மிக அதிக விலைக்கு விற்கப்படுவதா? கொரோனா தடுப்பூசியை விலையை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: மருந்து நிறுவனங்களிடம் இருந்து மத்திய அரசு வாங்கும் இரண்டு கொரோனா தடுப்பூசிகளின் கொள்முதல் விலையும் ரூ.150 ஆக நீடிக்கிறது. மத்திய அரசு தொடர்ந்து, மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கும் என தெரிவித்து உள்ளது.
மேலும் படிக்க
கொரோனா தடுப்பூசிக்கு ஏப்ரல் 24 முதல் முன்பதிவு துவக்கம்! 18 வயதை கடந்தவர்கள் பதிவு செய்யலாம்!
கொரோனா தடுப்பூசி விநியோகிக்க டிரோன் பயன்பாடு! ஆய்வு செய்ய அரசு அனுமதி!
Share your comments