17 - வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 11, 18, 23, ஆகிய தேதிகளில் முதல் மூன்று கட்டங்கள் நிறைவு பெற்றது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் இதுவரை 302 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துள்ளது. இன்று 9 மாநிலங்களில் உள்ள 72 தொகுதிகளுக்கு தேர்தல் நடை பெறுகிறது.
தொகுதி விவரங்கள் பின்வருமாறு
ஒடிஷா 6 தொகுதிகள், பீகார் 5 தொகுதிகள், ஜார்கண்ட் 3 தொகுதிகள், மேற்கு வங்காளம் 8 தொகுதிகள், உத்திர பிரதேசம் 13 தொகுதிகள், ராஜஸ்தான் 13 தொகுதிகள், மகாராஷ்டிரா 17 தொகுதிகள், ஜம்மு காஷ்மீர் 1 தொகுதி, மத்திய பிரதேசம் 6 தொகுதிகள், என மொத்தம் 72 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.
ஒடிஷாவிற்கு இன்றுடன் தேர்தல் நிறைவு பெறுகிறது. மொத்தமுள்ள 21 தொகுதிகளில், 15 தொகுதிகளுக்கு தேர்தல் நிறைவடைந்த நிலையில், மீதமுள்ள 6 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடை பெறுகிறது.
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்தநாக் என்னும் பகுதிக்கு மட்டும் மூன்றாவது கட்டமாக தேர்தல் நடை பெறுகிறது. தீவிரவாத தாக்குதல் அதிகமுள்ள பகுதி என்பதால் பாதுக்காப்பு அதிகரிக்க பட்டுள்ளது.
இன்று நடைபெறும் தேர்தலில் 961 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 12 கோடியே 80 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் உள்ளனர். மொத்தம் 1. 40 லட்சம் வாக்குச்சாவடிகள் என பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடந்து வருகிறது. பாதுகாப்பு பணிக்காக 20 லட்சத்திற்கும் அதிகமான காவல்துறையினரும், 2 லட்சத்திற்கும் அதிகமான துணை இராணுவ படையினரும் உட்படுத்தப்பட்டுள்ளார்.
தேர்தல் வரும் மே மாதம் 19 தேதியுடன் நிறைவடைகிறது. மே 23 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்று மாலைக்குள் முடிவுகள் அறிவிக்க பட்டுவிடும். பாஜக மற்றும் காங்கிரஸ்கும் கடும் போட்டி நிலவு வருகிறது. இவர்களுடன் மூன்றாவது அணியும் போட்டியினை எதிர்கொள்ள தயாராகிவருகிறது.
Share your comments