காவல்துறையில் பெண்களுக்கு 40 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு என அறிவிக்கப்பட்டப் போதிலும், அதனைப் பெற பெண்கள் படாத பாடு பட வேண்டியதாகவே உள்ளது. இது ஒருபுறமிருக்கு, பெண்களுககு 40% ஒதுக்கீடு வழங்குவதாகக் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
உத்தர்காண்ட், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பு அடைந்துள்ளது. இதன் ஒருபகுதியாக உத்தரகாண்ட் மாநிலத்திற்கான தேர்தல் அறிக்கையைக் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, காணொலி வாயிலாக தேர்தல் அறிக்கையை வெளியிட, அனைத்து தொகுதிகளிலும் அது நேரலை செய்யப்பட்டது.
தொடர்ந்துத் தேர்தல் அறிக்கையில் உள்ள அம்சங்கள் குறித்து பிரியங்கா காந்தி பேசியதாவது:-உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், காவல் துறையில் 40 சதவீத வேலைவாய்ப்பு பெண்களுக்கு வழங்கப்படும். 40 சதவீத அரசுப் பணிகளில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.500-க்குள் கொண்டு வரப்படும்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பாஜக அரசு எதுவும் செய்யவில்லை. எனவே, மாற்றத்தை கொண்டு வருவதற்கு, மக்கள் தங்கள் சக்திவாய்ந்த ஆயுதமாக வாக்குகளை பயன்படுத்த வேண்டும். காங்கிரஸ் கட்சியால் மாற்றத்தை கொண்டு வர முடியும். நீங்கள் விழித்தெழுந்து, உங்கள் உரிமைகளுக்காகவும் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும் போராடினால் மட்டுமே மாற்றம் சாத்தியமாகும்.
நாடு முழுவதும் உள்ள கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகை ரூ.14,000 கோடி உள்ளது. பிரதமருக்கு இரண்டு விமானங்கள் வாங்குவதற்கு செலவழிக்கப்பட்ட ரூ.16,000 கோடியை அதற்கு பயன்படுத்தினால், நிலுவைத்தொகையை எளிதாக வழங்கியிருக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தல் வரும்போது வாக்குறுதிகளை வாரி இறைப்பதும், ஆட்சி வந்தபிறகு அதை மறந்துவிடுவதும் சகஜம்தானே என்கிறார்கள் வாக்காளர்கள்.
வெறும்வயிற்றில் தினமும் நெய்- மலச்சிக்கலை நீக்கும் மந்திரசாமி!
எலிக்கு வைக்கப்பட்ட கேரட்- கல்லூரி மாணவிக்கு எமனாக மாறிய சோகம்!
Share your comments