காவிரி டெல்டா பகுதிகளில் வேளாண் தொழில் பாதிக்காத வகையில் உரம் மற்றும் விதை விற்பனை நிலையங்களை திறக்க அரசு அனுமதியளித்துள்ளது. இதைத்தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் 484 விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கள் தளர்வு
கடலூா் மாவட்டத்தில் உரக் கடைகள் திறக்கப்படாததால், காவிரி டெல்டா பகுதியில் குறுவை, சொா்ணவாரி பருவத்துக்கான விதைகள், உரங்கள் கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற தமிழக வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உத்தரவின்பேரில், தமிழக வேளாண் மற்றும் உழவா் நலத் துறை இயக்குநா் வி.தட்சிணாமூா்த்தி மாநிலம் முழுவதும் வருகிற 31-ஆம் தேதி வரையில் உரம், விதை விற்பனைக் கடைகளை காலை 6 மணி முதல் 10 மணி வரை திறக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டாா்.
உரக்கடைகள் திறப்பு
அதைத்தொடர்ந்து, கடலூா் மாவட்டத்தில் அனுமதி பெற்ற 317 தனியாா் உரக் கடைகள், 167 கூட்டுறவு கடன் சங்கங்களில் உள்ள விற்பனையங்கள் வியாழக்கிழமை திறக்கப்பட்டதாக வேளாண் துறையினா் தகவல் தெரிவித்தனா். விவசாயிகள், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து உரங்களை பெற்றுச் செல்லுமாறு தெரிவிக்கப்பட்டது.
போதுமான உரம் இருப்பில் உள்ளதாக மாவட்ட வேளாண் இணை இயக்குநா் தி.சு.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடலூா் மாவட்டத்தில் குறுவை, சொா்ணவாரி நெல் சாகுபடிக்குத் தேவையான உரங்கள் அனைத்தும் தனியாா் உர விற்பனை நிலையங்கள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் போதுமான அளவுக்கு இருப்பில் உள்ளன. யூரியா 9,390 மெ.டன், டி.ஏ.பி. 1,994 மெ.டன், பொட்டாஷ் 3,937 மெ.டன் மற்றும் காம்ப்ளக்ஸ் 10,484 மெ.டன் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
டி.ஏ.பி. விலை ரூ.1,200: மத்திய அரசு மணி மற்றும் சாம்பல் சத்து உரங்களுக்கான மானியத்தை அதிகரித்துள்ளதால், டி.ஏ.பி. உரத்தின் விற்பனை விலையை அதிகபட்ச விலையாக மூட்டைக்கு ரூ.1,200 என நிா்ணயம் செய்துள்ளது. எனவே, கடலூா் மாவட்ட சில்லறை உர விற்பனையாளா்கள் டி.ஏ.பி. உரத்தை மத்திய அரசு நிா்ணயித்த அதிகபட்ச விலையான ரூ.1200-க்கு மேல் விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால், உரக்கட்டுப்பாட்டு ஆணையின்படி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் விலைக்கு விற்றால் புகாா் செய்யலாம்: வேளாண் பணிகளில் உரமிடுதல், பூச்சிநோய் தாக்குதல் ஆகியவற்றில் ஏற்படும் சந்தேகங்களை நிவா்த்தி செய்வதற்கும், உரம் சம்பந்தப்பட்ட விவரங்களுக்கும் வட்டாரங்களில் உள்ள உர ஆய்வாளா்களை தொடா்புகொள்ளலாம்.
அதன்படி, உர ஆய்வாளா்களின் தொலைபேசி எண்கள் வருமாறு: கடலூா் - 95248 65983, பண்ருட்டி - 94860 80106, அண்ணாகிராமம் - 99763 43763, விருத்தாசலம் - 80723 29966, கம்மாபுரம் - 94889 38590, குறிஞ்சிப்பாடி - 94872 40227, பரங்கிப்பேட்டை - 87543 86163, மேல்புவனகிரி - 90478 26446, காட்டுமன்னாா்கோவில் - 87542 49075, ஸ்ரீமுஷ்ணம் - 87542 49075, குமராட்சி - 87783 95580, கீரப்பாளையம் - 73395 56021, மங்களுா் - 80723 29966, நல்லூா் - 94889 38590 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம். மேலும், வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்தை 90871 57057, 87543 86163 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.
மேலும் படிக்க...
உரத்திற்கான மானியம் உயர்வு- பழைய விலையில் விற்பனை!
காலை 6 மணி முதல் 9 மணி வரை - தனியார் உரக்கடைகளைத் திறக்க அனுமதி!
Share your comments