மத்திய அரசு ஊழியர்களை மகிழ்ச்சிப்படுத்தும் மற்றொரு செய்தி வந்துள்ளது. பல்வேறு ஊடக அறிக்கைகளின்படி, 7வது ஊதியக் குழுவின் ஊதியத் தொகுப்பின் கீழ் உள்ள அரசு ஊழியர்களுக்கு மார்ச் 2023க்குள் அகவிலைப்படி (DA) உயர்வு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் டிஏ உயர்வு தவிர, ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலை நிவாரணத்தையும் ( DR) மத்திய அரசு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
அகவிலைப்படி உயர்வு (DA Hike)
மத்திய அரசு ஊழியர்களுக்கு நீண்டகாலமாக நிலுவையில் உள்ள 18 மாத டிஏ நிலுவைத் தொகையை விரைவில் பெறுவார்கள் என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர்) ஆண்டுக்கு இருமுறை - முதலில் ஜனவரியிலும், பின்னர் ஜூலையிலும் திருத்தப்படும் என்பதை அரசு ஊழியர்கள் அறிந்திருக்க வேண்டும். மார்ச் 2023ல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 முதல் 5 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளதாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.
இருப்பினும், அகவிலைப்படி உயர்வு பணவீக்க விகிதம் மற்றும் 7வது CPC இன் பரிந்துரைகளின் அடிப்படையில் முடிவு செய்யப்படும். அந்த நேரத்தில் பணவீக்க விகிதம் அதிகமாக இருந்தால், DA மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.
செப்டம்பர் 2022 இல் DA உயர்வால் சுமார் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைந்தனர். 2022 செப்டம்பரில் மத்திய அரசு DA 4 சதவீதத்தை உயர்த்தியது, இது இதுவரை மொத்தமாக 38 சதவீத டிஏ உயர்வை பெற வழி செய்தது. இதற்கு முன், மத்திய அரசு ஊழியர்கள் 34 சதவீத டிஏவைப் பெற்று வந்தனர், இது 7வது ஊதியக் குழுவின் கீழ் மார்ச் 2022 இல் 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
18 மாத நிலுவைத் தொகைக்கு, அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அரசு விரைவில் தீர்வு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அங்கீகரிக்கப்பட்டால், அரசு ஊழியர்கள் 18 மாத டிஏ நிலுவைத் தொகையைப் பெறலாம். ஊழியர்களின் ஊதியக் குழு மற்றும் கட்டமைப்பின் அடிப்படையில் DA நிலுவைத் தொகை தீர்மானிக்கப்படுகிறது.
மேலும் படிக்க
ஆதார் இருந்தால் மட்டுமே பொங்கல் பரிசு: தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!
பணத்தை சேமிக்க நினைப்பவரா நீங்கள்? இந்த திட்டம் தான் பெஸ்ட் சாய்ஸ்!
Share your comments