வாழை விளைபொருள் பதப்படுத்தும் சிறுநிறுவனங்களுக்கு ரூ.10 கோடி நிதியுதவியும், அதனை சந்தப்படுத்துதலுக்கு 50 சதவீதம் வரை ரூபாய் மானியம் வழங்கப்படும் என திருச்சி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
-
பிரதமரால் அறிவிக்கப்பட்ட ஆத்மநிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் சிறுநிறுவனங்களுக்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தத் திட்டம் ஒரு மாவட்டத்துக்கு ஒரு விளைபொருள் என்ற அணுகுமுறையில் மத்திய அரசின் 60 சதவீத நிதி பங்களிப்புடன்மாநில அரசின் 40 சதவீத நிதி பங்களிப்புடனும் 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படுகிறது.
-
அதன்படி திருச்சி மாவட்டத்துக்கு ஒரு விளைபொருளாக வாழை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
-
தனிநபர் மற்றும் குழு அடிப்படையில் ஏற்கனவேஉணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனங்களை தொடங்குதல், பொது உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திதருதல், வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்தல், தொழில்நுட்ப பயிற்சிகள் போன்ற இனங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்.
-
மேலும், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், சுயஉத விக்குழுக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவை களுக்கும் நிதி உதவி வழங்கப்படும்.
-
திருச்சி மாவட்டத்தில் வாழை பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள அல்லது ஈடுபடவுள்ள சிறு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
-
இந்த திட்டத்தின் மூலம் சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனம் தகுதியான திட்ட மதிப்பீடு டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 கோடி வரை நிதி உதவி பெற்று பயன்பெற வாய்ப்புள்ளது.
-
வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
-
மேலும், சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் தேவைப்படும் தொழில் கடன் தொகை வங்கி மூலம் ஏற்பாடு செய்து தரப்படும்.
-
மேலும் விவரங்களுக்கு திருச்சி மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் நேரிலோ அல்லது தொலைபேசி எண்ணிலோ(0431-2422142)தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்- தமிழகம் முழுவதும் இன்று செயல்படுகின்றன!
வீட்டிற்கே வரும் இயற்கை வேளாண் விளை பொருட்கள் - உழவர் சங்கத்தின் புதிய முயற்சி!
Share your comments