1. செய்திகள்

6 பூச்சிக் கொல்லிகளுக்கு டிசம்பர் 31 முதல் தடை!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

மனிதர்களுக்கும் விளக்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் 6 பூச்சிக்கொள்ளி மருந்துகளுக்கு வரும் டிசம்பர் 31ம் தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது.

மனிதர்களுக்கும் விளக்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் 66 பூச்சிகொல்லி மருந்துகள் பயன்பாடு தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மத்திய அரசு கடந்த 2013ம் ஆண்டு குழு ஒன்றை அமைத்தது. இந்த 66 பூச்சி கொல்லி மருந்துகளுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளில் தடை அல்லது கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தியாவில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், மத்திய அரசு அமைத்த குழு18 மருந்துகளை தடை செய்ய பரிந்துரை செய்திருந்தது. 

அடுத்தது ரயில் மறியல்- விவசாய சங்கங்கள் அதிரடி அறிவிப்பு!

இதில் 12 பூச்சி கொல்லி மருந்துகளுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி உடனடி தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும் 6 பூச்சி கொல்லி மருந்துகள் 2020 டிசம்பர் முதல் தடை விதிக்கப்படுவதாகவும் அறிவித்த்து. அதன் அடிப்படையில், மேலும் 6 பூச்சி கொல்லி மருந்துகள் பயன்பாடுக்கு வரும் டிசம்பர் 31 வரை தடை விதிக்கப்படுகிறது. 

ஆகஸட் மாதம் தடை செய்யப்பட்ட மருந்துகள்

பெனோமில், கார்பரில், டியாஜினோன், பெனாரிமோல், பென்தியோன், லினுரோன், மெதோக்சி, எதில் மெர்குரி குளோரைடு, மெதில் பராதியோன், சோடியம் சியானிட், தியோமெடோன், திரிமோர்ப், அலக்ளோர், திகுளோர்வோஸ்,போரேட், பாஸ்பாமிதோன், திரியஜோபோஸ், திரிகுளோர்போன்.

2020ம் ஆண்டுக்கான தேசிய தண்ணீர் விருதுகள் -விண்ணப்பிக்க அழைப்பு!

வரும் 31ம் தேதி முதல் தடை செய்யப்படும் மருந்துகள்

  • அலக்ளோர் - Alachlor

  • டிக்ளோர்வோஸ் - Dichlorvos

  • போரேட் - Phorate

  • பாஸ்பாமிடன் - Phosphamidon

  • ட்ரையசோபோஸ் - Triazophos

  • ட்ரைக்ளோர்போன் - Trichlorfon

வாடல் நோயைத் தீர்க்கும் திறன் நுண்ணுயிரி - தயாரிப்பது எப்படி?

English Summary: 6 more Pesticides will be banned from December 31 which is risky for people and animals. Published on: 11 December 2020, 12:36 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.