நம் நாட்டின் 75-வது சுதந்திர தினம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இத்தினத்தை கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை வீடுகள்தோறும் இந்திய தேசியக்கொடியை பறக்கவிட வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
75வது சுதந்திர தினம் (75th Independence day)
நாட்டின் 75வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் 75வது சதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக 'சுதந்திர தின அமுதப் பெருவிழா' (ஆஜாதி கா அம்ரித் மஹோத்சவ்) என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. அதன்படி, ‛ஹர் கர் டிரங்கா' இயக்கத்தை வலுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
தேசியக் கொடி (National Flag)
இந்நிலையில், சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்களின் வீடுகளில் தேசியக் கொடியை (National Flag) பறக்கவிட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், வரலாற்றின் சில குறிப்புகளை பகிர்ந்த பிரதமர் மோடி, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஏற்றிய முதல் தேசியக் கொடியையும் பகிர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாம் ஆஜாதி கா அம்ரித் மஹோத்சவ் என்ற பெயரில் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில், அதை ஹர் கர் டிரங்கா (தங்களது வீடுகளில் தேசியக்கொடி) இயக்கம் மூலம் மேலும் வலுப்படுத்துவோம். ஆகஸ்ட் 13 முதல் 15 வரை நாட்டு மக்கள் தங்கள் வீடுகளில் மூவர்ண தேசியக் கொடியை பறக்க விடுங்கள். இந்த இயக்கம் தேசியக் கொடியுடனான நமது இணைப்பை மேலும் அதிகரிக்கும் என அதில் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
200 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை: பிரதமர் பாராட்டு!
இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவர் ஆனார் திரவுபதி முர்மு: ஜூலை 25-ல் பதவியேற்பு!
Share your comments