மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு குட் நியூஸ் வெளியாகியுள்ளது. ஹோலிக்கு முன்னதாக அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு வெளியிடப்ப்படக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு, அரசு அகவிலைப்படியை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்த முறையும் பண்டிகைக் காலத்தில் அரசு அகவிலைப்படியை உயர்த்தி, அதற்கான அறிவிப்பை வெளியிடக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
3% அதிகரிப்பு நிர்ணயம் (3% increase)
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, அகவிலைப்படியில் 3% உயர்வு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, இப்போது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 34% வீதத்தில் அகவிலைப்படி கிடைக்க உள்ளது. தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் (SBI INDEX) டிசம்பர் 2021 குறியீட்டில் ஒரு புள்ளி குறைந்துள்ளது. அகவிலைப்படிக்கான சராசரி 12 மாத குறியீடு 351.33 ஆகவும், இதன் சராசரியாக 34.04% ஆகவும் இருக்கின்றன. எனினும், அகவிலைப்படி எப்போதும் முழு எண்களில் வழங்கப்பட்டு வருகிறது. ஆகையால், ஜனவரி 2022 முதல், மொத்த அகவிலைப்படி 34% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, குறிப்பிடதக்கது.
இதற்கான அறிவிப்பு எப்போது வரும் என எதிர்பார்க்கலாம்? (When can we expect the announcement to come?)
ஊழியர்கள் ஏற்கனவே 31% அகவிலைப்படியைப் பெற்று வருகின்றனர். ஜனவரி 2022 முதல், 3% கூடுதல் அகவிலைப்படியின் பலனை ஊழியர்கள் பெறும் வாய்ப்புள்ளது. 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி, அடிப்படை சம்பளத்தில் மட்டுமே அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. மார்ச் மாதம் இது குறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். தற்போது தேர்தல் காரணமாக நடத்தை விதிகள் விதிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் காலத்தில் அரசு அகவிலைப்படி அதிகரிப்பு பற்றி எந்த தகவலையும் அறிவிக்காது.
AICPI-IW டிசம்பரில் குறைந்தது (AICPI-IW decreased in December)
அரசின் இந்த முடிவால் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறக்கூடும். அடுத்த அகவிலைப்படி அதிகரிப்பு ஜூலை 2022-இல் கணக்கிடப்படும் என்பது குறிப்பிடதக்கது. டிசம்பர் 2021க்கான ஏஐசிபிஐ-ஐடபிள்யூ குறியீடு தரவு வெளியாகி உள்ளது. இந்த எண்ணிக்கையின்படி, டிசம்பரில் இந்த எண்ணிக்கை 0.3 புள்ளிகள் குறைந்து 125.4 புள்ளிகளாக இருக்கிறது. நவம்பர் மாதத்தில், இது 125.7 புள்ளிகளாக உள்ளது. டிசம்பரில் எண்ணிக்கை 0.24% குறைந்தாலும், இது அகவிலைப்படி அதிகரிப்பை பாதிக்கவில்லை, என்பது குறிப்பிடதக்கது. தொழிலாளர் அமைச்சகத்தின் ஏஐசிபிஐ-ஐடபிள்யூ புள்ளிவிவரங்கள் வந்த பிறகு, இந்த முறை அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்கும் என்பது தெளிவாகி உள்ளது.
நவம்பரில் அதிகரிப்பு (Increase in November)
தொழிலாளர் அமைச்சகத்தின் தரவுகளின்படி, நவம்பர் 2021 இல் ஏஐசிபிஐ-ஐடபிள்யூ குறியீடு 0.8% அதிகரித்து 125.7ஐ எட்டியது, என்பது குறிப்பிடதக்கது. இதிலிருந்து அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்படும் என்பது தெளிவாகியுள்ளது. இப்போது டிசம்பர் 2021 இன் எண்ணிக்கையில் சிறிது சரிவு ஏற்பட்டாலும், ஜனவரி 2022 இல், 3 சதவிகிதம் என்ற விகிதத்தில் அகவிலைபப்டி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அரசு ஊழியர்களின் அகவிலைபப்டி, தற்போது 31 சதவீதமாக உள்ளது. இப்போது 3 சதவீத உயர்வுக்குப் பிறகு, இது 34 சதவீதத்தை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க:
தமிழகம்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு: வெற்றி கண்டது யார்யார்?
இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க கடைசித் தேதி!
Share your comments