இந்தியர்களின் தனித்துவமான அடையாள ஆவணமாக திகழும் ஆதார் தகவல் கசிந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. டார்க் வெப்பில் சுமார் 81 கோடி இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்துள்ளது என்ற தகவல் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பிசினஸ் ஸ்டாண்டர்ட் அறிக்கையின்படி, சுமார் 815 மில்லியன் இந்தியர்கள் அதாவது 81.5 கோடி இந்தியர்களின் தனிப்பட்ட அடையாளம் காணக்கூடிய தகவல்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த சைபர் செக்யூரிட்டி நிறுவனமான ரெசெக்யூரிட்டியின் (Resecurity) அறிக்கை கூறியுள்ளது.
அறிக்கையின்படி, 81.5 கோடி இந்தியர்களின் பெயர்கள், தொலைபேசி எண்கள், முகவரிகள், ஆதார் விவரம், பாஸ்போர்ட் தகவல்கள் உள்ளிட்ட விவரங்கள் ஆன்லைனில் விற்பனைக்கு உள்ளன. இதுக்குறித்து குறிப்பிடுகையில், "அக்டோபர் 9 அன்று, 'pwn0001' என்ற பெயரில் அச்சுறுத்தும் ஹேக்கர் ஒருவர் 815 மில்லியன் "இந்திய குடிமகன் ஆதார் மற்றும் பாஸ்போர்ட்" பதிவுகளுக்கான அணுகலை ப்ரீச் ஃபோரம்ஸ் தரகர்களில் வெளியிட்டார்."
அச்சுறுத்தல் ஹேக்கருடன் தொடர்பை ஏற்படுத்திய அதன் HUNTER (HUMINT) பிரிவு புலனாய்வாளர்கள், முழு ஆதார் மற்றும் இந்திய பாஸ்போர்ட் தரவுத்தளத்தையும் $80,000 க்கு விற்கத் தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியர்களின் தனிப்பட்ட விவரங்கள் கசிந்த நிலையில், ஹேக்கர் "pwn0001" மூலம் கண்டுபிடிக்கப்பட்ட மீறல் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) தற்போது விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நியூஸ் 18 வெளியிட்டுள்ள மற்றொரு செய்தியில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) தரவுத்தளத்திலிருந்து இந்த தகவல்கள் கசிந்து இருக்கலாம் என்று கூறுகிறது.
ஆதாரமாக, ஆதார் தரவுகளின் நான்கு பெரிய பட்டியல் கொண்ட ஸ்கிரீனை ‘pwn001’ வெளியிட்டது. பகுப்பாய்வு செய்ததில், இவை சரியான ஆதார் அட்டை ஐடிகள் என அடையாளம் காணப்பட்டது. ICMR அல்லது அரசாங்கத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ பதில் எதுவும் தற்போது வரை கிடைக்கவில்லை.
ஒரு கண்ணோட்டத்தில் கசிந்துள்ள நபர்களின் தனிப்பட்ட விவர எண்ணிக்கையானது, உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் 17, 18 மற்றும் 19-வது இடத்திலுள்ள ஈரான், துருக்கி மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளின் மொத்த மக்கள்தொகையை விட 10 மடங்கு அதிகம். இந்தியா 1.43 பில்லியன் மக்களைக் கொண்ட உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகும்.
இதற்கிடையில், தரவு கசிவது இது முதல் முறை அல்ல. முன்னதாக ஜூன் மாதம், கோவின் இணையதளத்தில் இருந்து வி.வி.ஐ.பி.க்கள் உட்பட தடுப்பூசி போடப்பட்ட குடிமக்களின் தனிப்பட்ட தகவல்கள், டெலிகிராம் மெசஞ்சர் சேனல் மூலம் கசிந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து அரசாங்கம் விசாரணையைத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் காண்க:
November Bank holiday: தீபாவளி உட்பட இவ்வளவு நாள் வங்கி விடுமுறையா?
Gold Rate Today- தொடர்ந்து 2 வது நாளாக தங்கத்தின் விலை சரிவு!
Share your comments